Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தமிழக அரசை ஸ்தம்பிக்கச் செய்ய திட்டம் - வைகோ குற்றச்சாட்டு

தமிழக அரசை ஸ்தம்பிக்கச் செய்ய திட்டம் - வைகோ குற்றச்சாட்டு

Fnewsnow 1 week ago

மிழ்நாட்டு அரசை ஸ்தம்பிக்க செய்ய அதிகாரிகள் சிலர் நினைப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

தூத்துக்குடியில் நிர்வாகி இல்ல விழாவில் பேசிய வைகோ, மேலும் கறியதாவது:

நாடாளுமன்றத்தில் நான் பேசிய உரைகளை தொகுத்து 4 பாகங்களாக வெளியிட்டேன். டெல்லியில் நடந்த அந்த விழாவில் தமிழ்நாட்டில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ராகுல் காந்தியிடம், ‘உங்கள் தந்தையை கடுமையாக விமர்சனம் செய்துளளேன். இந்த புக்கத்தை நீங்கள் வந்து வெளியிட வேண்டும்’ என்றேன். ‘அது அரசியல். அதையெல்லாம் மறந்துவிடுங்கள்’ என்றார். அதன் தமிழாக்கம் முடிந்தவுடன் அதனை சென்னையில் வைத்து வெளியிட தீர்மானித்துள்ளோம்.

இலங்கையில் வன்னிக்காடுகளுக்குச் சென்றேன். தமிழீழ விடுதலைபுலிகள், பொட்டு அம்மான் தலைமையிலான மெய்க்காவல் படையினரும் என்னை பாதுகாத்து அனுப்பி வைத்தனர். பின்னர், ‘நீங்கள் நாடாளுமன்றம் வந்தால் எம்.பி.க்கள் கலவரம் செய்வார்கள்’ என்றனர். அதனால், நான் 3 நாட்கள் காத்திருந்தேன். பின்னர் சபைக்குள் நுழைந்தேன். அப்போதைய சபாநாயகர் நஜ்மா ஹெப்துல்லா, எம்.பி.க்கள் வரவேற்றனர். நான் நெகிழ்ந்து போனேன்.

என்னை இங்கிருந்து அனுப்பியது கருணாநிதி. அவருக்கு நான் விசுவாசமாக இருந்தேன். ஊழலை அகற்ற முதல்வர் ஜோசப் விஜய் முயற்சிக்கிறார். லட்சங்கள், கோடிகள் கைமாறிய அதிகாரிகளும் உள்ளனர். அப்படிப்பட்ட அதிகாரிகள் இந்த அரசை எப்படியாவது ஸ்தம்பிக்கச் செய்ய வேண்டும் என்ற முடிவோடு எந்த கோப்புகளையும் நகர்த்துவது கிடையாது.

அப்படிப்பட்டவர்களை கண்டறிந்து, அவர்களை விடுவிக்க வேண்டும். நேர்மையானவர்களுக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என முதல்வரிடம் கூறியுள்ளேன். இவ்வாறு வைகோ பேசினார்.

Source : www.fnewsnow.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Fnewsnow