Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நாட்டின் 2027 வரவு செலவுத் திட்டம்: ஃபிட்ச் ரேட்டிங்ஸ் வெளியிட்ட அறிக்கை

நாட்டின் 2027 வரவு செலவுத் திட்டம்: ஃபிட்ச் ரேட்டிங்ஸ் வெளியிட்ட அறிக்கை

அரச முதலீடுகள் மற்றும் டித்வா சூறாவளிக்குப் பிந்தைய சீரமைப்புச் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும் நாட்டின் அரசாங்கமானது நிதி ஒழுக்கம் மற்றும் அரச கடனைக் குறைக்கும் இலக்குகளை 2027ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

நிதி இலக்குகள்

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் நிதி இலக்குகள் குறிப்பிடத்தக்க அளவில் விஞ்சப்பட்டு வெளிப்படுத்தப்பட்ட வெற்றியும் கடன் சுமையைக் குறைப்பதற்கு வழங்கப்பட்ட முன்னுரிமையும் காரணமாக கடந்த செப்டம்பர் மாதத்தில் நாட்டின் கடன் தரநிலையை CCC+ இலிருந்து B- ஆக உயர்த்த ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நடவடிக்கை எடுத்தது.

இதனப்படையில் 2026 ஆம் ஆண்டில் அரச வருமானம் வளர்ச்சியடைந்ததன் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.6 வீதம் முதன்மை கணக்கில் உபரி பதிவாகியுள்ளது.

இது முன்னர் எதிர்பார்க்கப்பட்ட 2.5 வீதம் இலக்கை குறிப்பிடத்தக்க அளவில் தாண்டியமையாகும்.

இந்தநிலையில் 2027 ஆம் ஆண்டிற்கான இந்த முதன்மை உபரி இலக்கு 2.3 வீதமாகவும் வரவு செலவு பற்றாக்குறை 4.5 வீதமாகவும் விரிவடையும் என மதிப்பிடப்பட்டிருந்தாலும் அத்தகுநிலையும் நாட்டின் கடன் தொகையைக் குறைக்கும் எதிர்கால பாதைக்கு இணக்கமானது என ஃபிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil