Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஸ்ரீலங்காவில் கொரோனா இரண்டாவது அலை ஆரம்பம்?

ஸ்ரீலங்காவில் கொரோனா இரண்டாவது அலை ஆரம்பம்?

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஸ்ரீலங்காவில் ஆரம்பித்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் உபுல் வீரசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளி கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.தூரநோக்கு பார்வை கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு அமைய செயற்படாத காரணத்தினால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் வீரசிங்க கூறியுள்ளார்.இப்படியான நிலைமை ஏற்படும் என ரணில் விக்ரமசிங்க மூன்று மாதங்களுக்கு முன்னரேயே கூறியிருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil