Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
30 நாட்கள் சர்க்கரையைத் தவிர்த்தால் என்னவாகும்? சுகர் கட் ட்ரெண்ட் உண்மையா?

30 நாட்கள் சர்க்கரையைத் தவிர்த்தால் என்னவாகும்? சுகர் கட் ட்ரெண்ட் உண்மையா?

Kalki Online 2 days ago

சுகர் கட் டயட் பின்பற்றுவது ஆரோக்கியத்திற்கான மிகச்சிறந்த ஒன்றாகும். தற்போது இது இளைஞர்கள் மற்றும் பிட்னஸ் ஆர்வலர்கள் மத்தியில் இந்த நோ சுகர் சேலஞ்ச் (No-Sugar Challenge) ஒரு மிகப்பெரிய லைஃப் ஸ்டைல் டிரெண்டாக மாறியுள்ளது.

உலக அளவில் பலரும் இந்த ஆரோக்கியமான பாதையை தேர்ந்தெடுத்து வருகிறார்கள். சர்க்கரையைத் தவிர்ப்பது என்பது இப்பொழுது வெறும் டயட் மட்டுமல்ல; அது ஒரு ட்ரெண்டாகவே மாறிவிட்டது.

சர்க்கரையைத் தவிர்த்து 21 முதல் 30 நாட்கள் ஆகும் பொழுது, நம் உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாகும்; உடல் எடை குறையும் மற்றும் சருமம் பொலிவடையும் என இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதள ஆரோக்கியப் பக்கங்களில் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். சர்க்கரையை ஒரே நாளில் முற்றிலும் 'ஜீரோ' ஆக்குவது சிலருக்கு தலைச்சுற்றல் அல்லது சோர்வை ஏற்படுத்தலாம். எனவே சர்க்கரை அளவை படிப்படியாக குறைப்பது பாதுகாப்பானது மற்றும் நீடித்த பலனைத் தரக்கூடியது.

லேட்டஸ்ட் சுகர் கட் ட்ரெண்டுகள்:

ஃபைபர்மேக்ஸிங் (Fibermaxxing):

சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பதற்குப் பதிலாக, செரிமானத்தை மெதுவாக்கும் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது இப்போது ட்ரெண்ட். இது திடீரென ஏற்படும் இனிப்பு ஆசையைக் கட்டுப்படுத்துகிறது.

இயற்கை மாற்றுகள் (Natural Sweetners):

வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக ஸ்டீவியா (Stevia), மாங்க் ஃப்ரூட் (Monk Fruit) மற்றும் அல்லுலோஸ் (Allulose) போன்ற இயற்கை இனிப்புகளை மக்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர். ஸ்டீவியா எனப்படும் சர்க்கரை துளசி இலையில் இருந்து தயாரிக்கப்படும் இதில் கலோரிகள் பூஜ்ஜியம். மாங்க் ஃப்ரூட் எனப்படும் துறவி பழம் ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தாத இயற்கை இனிப்பு இது.

பாரம்பரிய சிறுதானியங்கள்:

ராகி, கம்பு, சோளம் மற்றும் குதிரைவாலி போன்ற குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகள் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகின்றன.

என்ன சாப்பிடலாம்?

ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு மற்றும் பப்பாளி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் இயற்கையான நார்ச்சத்துடன் கூடிய சர்க்கரை உள்ளதால் உடலுக்கு நல்லது.

பருப்பு மற்றும் பயறு வகைகளில் கொண்டைக்கடலை, பாசிப்பயறு, ராஜ்மா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

உணவில் முட்டை, மீன், பருப்பு வகைகள், சுண்டல் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்க்கும் போது இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் குறையும்.

நட்ஸ்களில் பாதாம், வால்நட் மற்றும் வெந்தயம் எடுத்துக் கொள்வது நல்லது. வெந்தயம் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தும்.

பானங்களில் சர்க்கரை இல்லாத கிரீன் டீ, மோர், லெமன் வாட்டர் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

 Hidden sugar

தவிர்க்க வேண்டிய மறைமுக சர்க்கரைகள் (Hidden Sugars):

இப்பொழுது மக்கள் பேக் செய்யப்பட்ட உணவுகளில் இருக்கும் 'மறைமுக சர்க்கரை' பற்றி விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். பாக்கெட் ஜூஸ்கள், கூல் ட்ரிங்க்ஸ், டொமேட்டோ சாஸ், யோகர்ட், கார்ன் ஃப்ளேக்ஸ், பிஸ்கட் மற்றும் ரெடிமேட் ஓட்ஸ் போன்றவற்றில் இருக்கும் சர்க்கரையை லேபில்களைப் பார்த்து தவிர்த்து விடுகிறார்கள்.

டீ, காபியில் சேர்க்கும் வெள்ளை சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை அல்லது தேன். தேன் உடலுக்கு நல்லது தான் என்றாலும் சர்க்கரை அளவை உயர்த்தும். எனவே இவற்றைத் தவிர்க்கலாம்.

உடலில் திடீரென மச்சம் தோன்றுகிறதா? பிளாக் மச்சம் புற்றுநோயின் அறிகுறியா?

கீட்டோ மற்றும் லோ-கார்ப் ஸ்நாக்ஸ் (Keto & Low Carb Snacks):

சுகர் கட் செய்பவர்களுக்காகவே சந்தையில் பிரத்தியேக ஸ்நாக்ஸ்கள் வந்து விட்டன.

டாக் சாக்லேட் 85% மேல் கோகோ உள்ள சக்கரையற்ற டார்க் சாக்லேட்டுகள்.

பாதாம், வால்நட், பூசணி விதைகள், சியா விதைகள் கலந்த கலவை.

மற்றும் சுகர் ஃப்ரீ பேக்கிங்கில் பாதாம் மாவு மற்றும் தேங்காய் மாவு பயன்படுத்தி சர்க்கரை இல்லாமல் கேக், குக்கீஸ் செய்வது போன்றவை இப்போது சந்தையில் கிடைக்கின்றன.

குளுக்கோஸ் மானிட்டரிங் (CGM):

இப்போது ஆரோக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் சர்க்கரை அளவை உடனுக்குடன் கண்காணிப்பதற்கு CGM சாதனங்களைக் கைகளில் அணிந்து கொள்கிறார்கள். எந்த உணவு சர்க்கரை அளவை ஏற்றுகிறது என்பதைப் பார்த்து உணவை மாற்றி அமைப்பது தற்போதைய பெரிய ட்ரெண்டாக மாறியுள்ளது.

கிரான்பெர்ரி vs ப்ளூபெர்ரி: ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது? ஊட்டச்சத்து உண்மைகள்!

Reference:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online