Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கிரான்பெர்ரி vs ப்ளூபெர்ரி: ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது? ஊட்டச்சத்து உண்மைகள்!

கிரான்பெர்ரி vs ப்ளூபெர்ரி: ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது? ஊட்டச்சத்து உண்மைகள்!

Kalki Online 6 days ago

ன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்த கிரான்பெர்ரி மற்றும் ப்ளூபெர்ரிகள் இதயம், நோயெதிர்ப்பு மற்றும் செரிமானத்திற்குச் சிறந்தது.

இரண்டிலும் நார்சத்து உள்ளது. ப்ளூபெர்ரியில் அதிக வைட்டமின் கே சத்து உள்ளது‌. கிரான்பெர்ரியில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளன. அதில் உள்ள ஒரு வேதிப்பொருள் சிறுநீர்பாதையை பாதுகாக்கிறது. இரண்டிலும் அதிக ஊட்ச்சத்துக்கள் மற்றும் நார்சத்து உள்ளன.

பொதுவாகவே பெர்ரி வகைகள் ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்ததாக இருக்கும். அவைகள் வளரும் மண், வெப்பநிலை மற்றும் தண்ணீர் பொறுத்து பலவிதமான ஆன்டி ஆக்சிடண்டுகள் உருவாகும்‌. ஆராய்ச்சியின் படி ப்ளூபெர்ரியைவிட கிரான்பெர்ரியில் அதிக ஆன்டி ஆக்சிடண்டுகள் உள்ளதாக அறியப்படுகிறது. ப்ளூபெர்ரியில் அதிக அளவு ஃபீனாலிக் பொருட்கள் உள்ளதாக தெரிகிறது‌ இவைகள் செடிகள் மூலம் தயாரிக்கப்படுகின்றன.

இரண்டிலும் ஆன்டி ஆக்சிடண்ட் வித்தியாசங்கள்:

ப்ளூபெர்ரியில் ஆன்தோசயானின் நிறைந்துள்ளது. இதுவே இப்பழத்திற்கு நல்ல நீல நிறத்தைத் தருகிறது‌ கிரான்பெர்ரியில் ஆன்தோசயானின் இருந்தாலும் அது ப்ளூபெர்ரியில் இருப்பதைவிட குறைவாகவே உள்ளது.

ப்ரோஆன்தோ சயானிடின்ஸ் - இப்பொருள் கிரான்பெர்ரியில் அதிக அளவு காணப்படுகிறது.

அது ஏடைப் ப்ரோ ஆன்தோசயானிடின் ஆகும். இதற்கு ஒரு தனி பண்பு உள்ளது. இந்த ஆன்டி ஆக்சிடண்டு உடல் திசுக்களில் உள்ள கெடுதல் தரும் பாக்டீரியாவை நீக்கும் சக்தி படைத்தது‌ இதன் மூலம் சிறுநீர்ப் பாதையில் தொற்றுக்களை நீக்கி ஆரோக்கியமாக வைக்கிறது‌.

 Berrys | பெர்ரி நன்மைகள்

ஆன்டிஆக்சிடண்டின் பயன்கள்:

செடிகளால் தயாரிக்கப்படும் ஆன்டி ஆக்சிடண்டுகள் மனித உடலின் உள் சிஸ்டத்தைப் பாதுகாக்கிறது. சாதாரண நிலையில் நம் உடலில் கெட்ட மூலக்கூறுகளான ஃப்ரீ ராடிகல்கள் உண்டாக்கப்படுகின்றன. இவை ஆக்சிடேடிவ் அழுத்தத்தைக் அதிகப்படுத்தி இதய நோய் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆனால் ஆன்டி ஆக்சிடண்டுகள் ஃப்ரீ ராடிகல்களின் பாதிப்பிலிருந்து திசுக்களைக் காக்கிறது. இரண்டு பெரிகளிலும் உள்ள ஆன்தோசயானின் மற்றும் பீனாலிக் பொருட்கள் தொற்றைத் தடுக்கின்றன.

ப்ளூபெர்ரியின் ஆன்தோசயானின் அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்டதால் அழற்சியைக் குறைத்து நீரிழிவு மற்றும் இதயத்தை பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கிறது.

நார்சத்து:

கிரான்பெர்ரியில் ப்ளூபெர்ரியைவிட அதிக நார்சத்து உள்ளது‌. கிரான்பெர்ரியில் 100 கிராம் அளவிற்கு 3.6 கிராம் அளவு நார்சத்து உள்ளது. ப்ளூபெர்ரியில் 100 கிராமிற்கு 2.4 கிராம் அளவு நார்சத்து உள்ளது‌. செரிமானத்திற்கு இது இன்றியமையாதது‌ இது ரத்தச் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது குடலில் நல்ல பாக்டீரியா உருவாக இரண்டு பெர்ரிகளுமே சிறந்ததாகும். இவை இரண்டும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

சிறுநீர் பாதையில் தொற்று உள்ளவர்கள் அதைத் தடுக்க ப்ரோ ஆன்தோசயானிடின் நிறைந்த கிரான்பெர்ரியை பயன்படுத்துவது சிறந்தது‌ எடைக் குறைப்பு மற்றும் இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த ப்ளூபெர்ரி சிறந்தது‌ நீரிழிவு உள்ளவர்கள் இந்த இரண்டு பெரிகளையும் உட்கொள்ளலாம்‌.

சிறந்த எலும்பு ஆரோக்கியத்தை ப்ளூபெர்ரி தருகின்றன. ஒரு கப் ப்ளூபெர்ரியில் 29 மைக்ரோக்ராம் அளவு கே சத்து உள்ளதால் இது எலும்பு ஆரோக்கியம், மெடபாலிச மேம்பாடு மற்றும் இரத்தத்தில் கால்சியம் அளவை சீராக வைப்பது போன்றவற்றிற்கும் சிறந்தது. இரத்த உறைதலுக்கும் ப்ளூபெர்ரி சிறந்தது.

பலவித ஆராய்ச்சிகளில் வயதானவர்கள் ப்ளூபெர்ரி உட்கொள்ளும்போது நல்ல நினைவாற்றல் மேம்படுவதாக அறியப்பட்டுள்ளது‌. ந்யூரான் செயல்பாடுகளை இது ஊக்குவிக்குகிறது‌. உங்களுக்கு வைட்டமின் கே அதிகரிக்க ப்ளூபெர்ரி உட்கொள்ளுங்கள்‌. சிறுநீர்ப் பாதை தொற்று இருப்பவர்கள் கிரான்பெர்ரியை பயன்படுத்துங்கள்.

இரண்டு பெர்ரிகளுமே நல்ல ஊட்டச்சத்து நிறைந்ததால் உங்கள் உடல் பிரச்சனைகளுக்குத் தகுந்தாற்போல் இரண்டு பெர்ரிகளையும் பயன்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

இனி பார்லர் போகவேண்டாம்! பெர்ரி பழங்கள் தரும் 'இன்ஸ்டண்ட்' பொலிவு!மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online