Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அஸ்ஸாம் ஹர்கிலா படையைப் பற்றித் தெரியுமா?

அஸ்ஸாம் ஹர்கிலா படையைப் பற்றித் தெரியுமா?

Kalki Online 2 weeks ago
 MM strip

அஸ்ஸாமைச் சேர்ந்தவர் பூர்ணிமாதேவி. இவர் அட்ஜுடண்ட் நாரைகள் பற்றிய ஆராய்ச்சியில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றவர்‌ இவர்.

நாமெல்லோரும் குதிரைப்படை, காலாட்படை, கடற்படை கேள்விபட்டிருக்கோம்‌. ஆனால், இந்த அரிய நாரை வகைகளை காப்பாற்ற அசஸ்ஸாமில் ஹர்கிலா படை ஆரம்பிக்கப்பட்டது.

நாரை வகைகள் பெருமளவு குறைந்திருப்பதைக் கண்டு வருத்தம் அடைந்தார்‌ பூர்ணிமாதேவி. சிறுவயதில் பிரம்மபுத்ரா நதிக்கரைப் பகுதியில் வளர்ந்த போது அதிக அளவில் நதிக்கரையில் காணப்பட்ட நாரைகள் இவர் வளர்ந்த பிறகு பெருமளவில் குறைந்தது கவலையை அளித்தது‌. இதற்கான காரணத்தை தேடினார்.

அரியவகை நாரையைத் காப்பாற்ற 10,000 பெண்கள் கொண்ட படையை திரட்டினார். அவர்கள் அனைவரும் நாரைகளின் கூடுகளை பாதுகாத்து இனத்தைப் பெருக்கினர். இந்த நாரை இனங்கள் ஐந்தடி உயரம் கொண்டவை. கிராம மக்களால் இந்த பறவை தீயசக்தி என்று நம்பப்பட்டது.

அவற்றின் கூடுகள் அழிக்கப்படுவதும், நாரைகள் வேட்டையாடப்படுவதும்தான் அந்த இனங்கள் பெருமளவு குறைவதற்கு காரணம் என்பது தெரியவந்தது‌. கிராமமக்கள் அவற்றின் கூட்டை அழிக்க மரங்களை வெட்டினர்‌. அவை கெட்ட சக்தி என்றும் நோய்களைக் கொண்டு வரும் என்றும் மூட நம்பிக்கையில் அவற்றை அழித்தனர்.

சிறுவயதிலிருந்து தன் பாட்டியிடம் வயல்கள் மற்றும் பிரம்மபுத்ரா நதிக்கரையில் வளர்ந்த போது நாரைகள் பற்றிய கதைகளையும், இயற்கையின் வளங்களைப் பற்றியும் பாட்டியிடம் இருந்து பூர்ணிமா நிறைய கற்றுக் கொண்டார்‌. வளர்ந்து கல்லூரியில் விலங்கியல் பிரிவில் பட்டம் பெற்றார்‌. அவர் பி.ஹெச்.டி படிக்கும்போது நாரைகள் கூடுகள் கட்டியிருந்த மரத்தை கிராம மக்கள் வெட்டிய செய்தியை அறிந்ததும் அந்த இடத்திற்கு உடனே சென்றார்.

சிறுகதை: நியாயம் என்றால் நியாயம் தான்..!

அறியாமையால் மக்கள் செய்யும் தவறுகளை தடுக்க கிராம மக்களுக்கு நாரைகள் எப்படி இயற்கைக் காவலர்களாகச் செயல்படுகின்றன என்பதைப் புரிய வைத்தார்‌. ‌ இதற்காக பொதுக் கூட்டங்கள் நடத்தி மக்களுக்கு நாரைகள் மற்றும் இயற்கையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். மக்கள் மனது மாறியது‌; 2010 ஆண்டிலிருந்து மரங்களை வெட்டுவது தடுக்கப்பட்டது.

 ஹர்கிலா படை | Storks

நாரைகள் இனம் அழிவைத் தடுக்க பத்தாயிரம் பெண்மணிகள் சேர்த்து அஸ்ஸாமில் ஹர்கிலா படையை தொடங்கினார்கள்.

பெண்களை ஒன்று சேர்க்க அவர்களுக்காக சமையல் போட்டிகளை நடத்தி ஊக்குவித்ததோடு அவர்களிடம் நாரைகளின் இனம் காக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

பெண்களை ஊக்கப்படுத்தி நாரைகள் கூடு கட்டும் போது அவற்றிக்காக விழாக்கள் நடத்தி மக்களின் மனதில் நாரை கெட்ட சக்தி அல்ல. காக்கப்பட வேண்டிய இனம் என்பதைப் புரிய வைத்தார்.

2014 ம் ஆண்டு ஹர்கிலா படை தொடங்கப்பட்டது‌. அது மட்டுமல்லாமல் பைகள், துணிகள் மற்றும் டவல்களில் நாரைகளின் உருவம் இடம் பெறச்செய்து தீய சக்தியாகத் கருதப்பட்ட பறவையை கலாச்சார அடையாளம் ஆக்கினார்.

மக்களின் தவறான கண்ணோட்டத்தால் 150 பறவைகளே இருந்த நிலையில் இவரின் முயற்சியால் ஆயிரக்கணக்கில் பறவைகள் பெருகின. அஸ்ஸாமில் துணிகளில் நாரைகளின் உருவம் பொறிப்பு பாரம்பரியமானது. பெண்கள் நெசவத் தொழிலில் அதிக அளவு ஈடுபட்டு நாரைகள் உருவங்கள் பொறித்த பைகள், குஷன் மற்றும் கைத்தறி ஆடைகளில் இடம் பெறச் செய்தனர். இதனால் பெண்களின் பொருளாதார நிலைமை உயர்ந்தது‌.

சிறுகதை: பெண்!

2021ம் ஆண்டில் பூர்ணிமா தேவி ஹர்கிலா பள்ளி ஒன்றை ஆரம்பித்து, அங்கு படிப்போடு ஹர்கிலா பற்றிய பாட்டு இவையெல்லாம் ஊக்கப்படுத்துகிறார். ‌இந்தியாவின் மிக உயர்ந்த விருதான நாரி சக்தி புரஸ்கார் விருது 2017ம்ஆண்டு பூர்ணிமா தேவிக்கு வழங்கி அரசு அவரை கௌரவித்தது

பறவை இனத்தைக் காக்க மக்களின் அறியாமையைப் போக்கி நாரை இனங்களைக் காப்பதற்காகவே ஹர்கிலா படையைத் தொடங்கி அதில் வெற்றி பெற்ற பூர்ணிமா தேவியின் இயற்கையின் நேசிப்பு குறித்து பெண்கள் பெருமைபடவேண்டும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online