Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அவமானத்தை சாதனையாக மாற்றிய இளம் பெண்: உங்களது திறமையே உங்கள் அடையாளம்!

அவமானத்தை சாதனையாக மாற்றிய இளம் பெண்: உங்களது திறமையே உங்கள் அடையாளம்!

Kalki Online 1 month ago

ருவரின் தனிப்பட்ட தனித்திறன்கள் என்பவை அவர் எப்படிப்பட்ட வேலையில் இருந்தாலும், என்ன தொழில் செய்தாலும் முக்கியமானவை.

அந்த திறன்களே அவரது கேரக்டரை செதுக்கும். அவர் எப்படி இயங்குகிறார், மற்றவர்களுடன் எப்படி பழகுகிறார், தன் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துகிறார் என்பது போன்ற பல விஷயங்களை முடிவு செய்யும்.

அப்படி ஒருவருக்கு அடிப்படையாக சில திறன்கள் அவசியம்.

வெளிநாடு ஒன்றுடன் வர்த்தகம் செய்யும் ஒரு நிறுவனத்தின் பணியாளர் அந்த வெளிநாட்டு மொழியை நன்கு தெரிந்து வைத்திருந்தால், அந்த நிறுவனத்தில் அவருக்கான மதிப்பு மிக அதிகம் அடிப்படையாக ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது கூட ஒரு முக்கியமான திறமை.

வட இந்திய தொழிலாளர்கள் பரவலாக இங்கு பணிக்கு வந்துவிட்ட சூழலில் அவர்களுக்கு புரிகிற மாதிரி ஹிந்தியில் பேசுவது கூட ஒரு தனி திறன்தான். விற்பனை துறையில் பணிபுரியும் ஒருவருக்கு தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளை மதிப்புடன் விவரித்து வியாபாரம் செய்யும் திறன் வேண்டும்.

போட்டிகள் நிறைந்ததாக உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் ஒரு நாள் முழுக்கச் செய்கிற வேலையைச் சில நிமிடங்களில் செய்துவிடும் தொழில்நுட்பம் வந்துவிட்டது.

இந்நிலையில் தனித்திறனே ஒருவரைச் சக மனிதர்களிடம் இருந்தும் தொழில் நுட்பங்களிடம் இருந்தும் வேறு படுத்திக் காட்டும். சரியான திறன்களைத்தேடி அடையுங்கள்.

புனிதா இருக்கும் இடம் அவ்வளவு கலகலப்பாக இருக்கும். இவள் பள்ளியில் பிளஸ் ஒன் வகுப்புப் படிக்கும் மாணவி .

அப்படிப்பட்ட புனிதா ஒரு நாள் சோகமாக இருந்தாள்.

அவள் அம்மா அவளிடம் விசாரிக்க, "நான் குரோஷா வயர்களை வைத்து விதவிதமான பொருட்கள் செய்வேன்னு உனக்கு தெரியுமே அம்மா… அப்படி அழகா ஒரு வளையல் செய்ய மாட்டிகிட்டு போனேன் ஒரு பொண்ணு அதைப்பிடுங்கி கேவலமா இருக்குனு, நசுக்கில் போட்டுட்டா " என்று சொல்லி அழுதாள் புனிதா.

 தனித்திறன்கள் - Youth Entrepreneurship,

உடனே அவள் அம்மா, அந்த வளையைலை பற்றி மற்றவர்கள் என்ன சொன்னார்கள்? எனக் கேட்க, ரொம்ப அழகா இருந்துச்சு? என்றாள் புனிதா.

அதை மட்டும் நம்பு! நீ செய்ற விஷயங்கள் நல்லா இல்லை என்று மற்றவர்கள் முடிவு செய்யக் கூடாது. என்றாள் அம்மா.

அதன் பின் அம்மாவின் ஊக்க மொழிகளாக,புனிதா க்ரோஷா வயர்களை வைத்து ஏராளமான அழகுப் பொருட்களை உருவாக்கினாள். தனியாக ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தைஉருவாக்கி அவற்றை விற்பனை செய்ய தொடங்கினாள்.

பிரபலங்கள் பலரும் அவற்றை விரும்பி வாங்கி அணிந்தனர். படிப்படியாக அ ஒரு சாதன பொருட்கள், உடைகள் என்று அவளது திறமை விரிய, பள்ளி படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே அவள் தொழிலதிபர் ஆகி இருந்தாள். காரணம் தன் திறமையை மற்றவர்கள் தீர்மானிக்க அவள் அனுமதிக்கவில்லை.

திறமை வளர்க்கும் எளிய வழிகள்.

தீர்வு இல்லாத பிரச்னை என்று எதுவுமே இல்லை. இப்போது நீங்கள் சந்திக்கும் நெருக்கடி எதுவாக இருந்தாலும், அதை தீர்ப்பதற்கான வழி உங்கள் கண்ணெதிரே இருக்கிறது.

இன்று உங்களைக் காட்டி வதைப்பது எந்த பிரச்னையாக இருந்தாலும் தோல்வி அடைந்துவிட்டதாக நினைக்காதீர்கள். எதையும் மாற்றும் திறமையும் நம்பிக்கையும் உங்களிடம் இருக்கிறது.

நிமிர்ந்து நில்! உங்களைப் போல வேறொரு நகல் கிடையாது: வெற்றிக்குத் தயாராகுங்கள்!

மற்றவர்களின் மோசமான விமர்சனங்களை அலட்சியப் படுத்துங்கள். அவை உங்களை திருத்திக்கொள்ள சொல்லப்படுவதில்லை. உங்களை வீழ்த்துவதற்காக வீசப்படும் வசைகள் அவை.

உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் அக்கறையான ஆலோசனைகளை சொல்லும் நல்ல நண்பர்களை எப்போதும் இழக்காதீர்கள்.

பணம் மற்றும் பொருட்களை வைத்து உங்களை சபலத்துக்கு ஆளாக்கும் சூழல்களை உறுதியாக தவிர்த்துவிடுங்கள். உங்களால் அவற்றை சம்பாதிக்க முடிகிற நாள் நிச்சயம் வரும்.

நீங்கள் அடைய நினைப்பது எதுவாக இருந்தாலும் அதற்காக ரிஸ்க் எடுக்க தயங்காதீர்கள்.

நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை சும்மா வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை. அதை பயன்படுத்தி உங்கள் துறையில் முன்னேற பாருங்க தெளிவான மனதுடன் உறுதியாக செயல்படும் ஒருவர் மற்றவர்களை விட எளிதாக முன்னேறுவார்.

ஒரு திறன் என்பது உங்களுக்கு புகழையோ பணத்தையோ, பெரிய மனிதர்களின் நட்பையோ பெற்று தரவேண்டும். உங்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுவது இந்த விஷயங்கள்தான் வெளிப்படையான தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் இலக்கை அடைய இதுதான் ஒரே வழி!

நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும், அந்த துறை பற்றிய விஷயங்களைத்தேடி அறிந்துகொள்ளுங்கள். புத்தங்கள் படிப்பது, இணையதளங்களிலும், செய்திகளிலும் படிப்பது, அனுபவ சிலிகளுடன் பேசுவது என்று தேடலில் ஈடுபடுங்கள்.

இதனால் உங்களது தனித்திறன்களை வளர்த்துக்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்.

கதையின் வழியே உத்வேகம் அடைவதோடு மட்டுமல்லாமல், உங்களிடம் இருக்கும் சிறிய கலை ஆர்வத்தையும் வருமானம் தரும் தொழிலாக மாற்றி, சுயமாக நின்று சாதிக்கும் தன்னம்பிக்கையை நீங்கள் பெறுவீர்கள்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online