Dailyhunt
பெற்றோர்களே கவனிங்க! உங்கள் குழந்தையின் எதிர்காலம் வளர்ப்பிலா? வசதியிலா?

பெற்றோர்களே கவனிங்க! உங்கள் குழந்தையின் எதிர்காலம் வளர்ப்பிலா? வசதியிலா?

Kalki Online 0 months ago

ற்போதைய காலகட்டத்தில் தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும் நிலையில் கணவருக்கு ஒரு ஆசையும் மனைவிக்கு ஒரு ஆசையும் இருக்கும்.

அதேபோல பொியவர்களுக்கும் சில ஆசைகள் உண்டல்லவா!

ஒவ்வொருவர் ஆசைகளும் எதிா்பாா்ப்புகளும் வேறு வேறு விதமாக இருக்கும். ஆண் குழந்தை வேண்டும் என ஒரு சிலரும், பெண்குழந்தை வேண்டுமென ஒரு சிலரும், வேண்டுவதோடு தனது ஆசைகளை தொிவிப்பது அநேக குடும்பங்களில் நிகழ்ந்துவரும் இயல்பான ஒன்றாகும்.

இதில் முக்கியமாக பாா்க்கவேண்டியது என்னவெனில் ஆணோ! பெண்ணோ! இந்த காலத்தில் இரண்டுமே ஒன்றுதான்.

தற்போதைய காலகட்டங்களில் கூடுமான வரையில் சுகப்பிரசவத்திற்கு வேலையே இல்லாமல்போய்விட்டது.

மேலும் சிலர் நாள் நட்சத்திரம் பாா்த்து இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாகவே சிசோியன் மூலம் குழந்தை பிறப்பு உறுதியாகிறது.

அதெல்லாம் சரி குழந்தை பிறப்பு, ஆண் பெண் சுகப்பிரசவம், சிசோியன், பெயர்வைப்பது, குழந்தைக்கு பிறந்தநாள் + 3 வயதிலேயே பள்ளியில் சேர்த்தல், ஸ்கூல் அட்மிஷன் பீஸ் லட்சக்கணக்கில் செலவுமேற்கொள்ளுதல் அம்மா அப்பா என்ற தூயதழிழ் தவிா்த்து டாடி- மம்மி அந்த அளவிற்கு பெற்றோா்களின் இலக்குகளுக்கு அளவே இல்லை எனலாம்.

ஆனால் அதைவிட குழந்தைகளின் வளா்ப்பு முறையில் பலர் கோட்டைவிட்டு விடுவதையும் அதனால் குடும்பத்திலும் குழந்தைகளின் வாழ்க்கை முறையிலும் பலவித மாற்றங்கள் வந்து போவதும் நிதர்சனமே.

அதாவது காலம் வெகு வேகமாக வளர்ந்துவருகிறது. இதில் செல்போன் ஆதிக்கம் பலவிதத்தில் நன்மையைத் தந்தாலும் அதிக அளவு ஆபத்தைத்தான் தருகிறது அதுவே நிஜம்

எனவே ஆண் குழந்தைகளை அதிக செல்லம் கொடுத்து வளா்க்கவேண்டாம் அவர்களை வறுமையில் வளர்க்கவேண்டும். பணம் மற்றும் உழைப்பின் தன்மை தொியும் நிலையை உணர்த்த வேண்டும். அதேபோல பெண்குழந்தைகளை அதிக செல்லம் கொடுத்துவளர்க்கவும் வேண்டாம், அதுவும் ஆபத்துதான். அதேநேரம் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும், அறநெறிகளையும் நல்ல குணமுள்ளவர்களாகவும், மனிதநேயம் கடைபிடிப்பவர்களாகவும், இறை நம்பிக்கை உள்ளவர்களாகவும், அடுத்தவர்கள், பொியவர்களை, மதிக்கும் தன்மை உடையவர்களாகவும் வளர்ப்பதே நல்லது.

கோபத்தைக் குறைக்க வேண்டுமா? இந்த 10 வினாடி இடைவெளி உங்களுக்கு உதவும்!

இதில் கணவன் மனைவி இருவரும் ஒத்த கருத்துகளோடு நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுத்து வளா்ப்பதே அனைவருக்கும் நல்லதாகும். மொத்தத்தில் அது பிள்ளைகளின் எதிா்காலத்திற்கும் நல்லது. குழந்தை பருவத்திலேயே செல்போன் பள்ளிப்படிப்பை முடிக்கும் நிலையில் இருசக்கரவாகனம் வாங்கிக்கொடுப்பதும் தவிா்கப்படவேண்டிய ஒன்றாகும்.

குழந்தைகளுக்கு கற்றுத்தரவேண்டியதே, துணிவு, பணிவு. இவை இரண்டையும் சொல்லிக்கொடுங்கள். தோளுக்கு உயர்ந்தால் தோழன், என்ற நிலைபாடுகளின் அடிப்படையில் குழந்தைகளை வளா்ப்பதே சாலச்சிறந்தது.

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர்கள் நல்லவராவதும் தீயவர் ஆவதும் பெற்றோா்கள் வளர்க்கையிலே ஆக, இந்த நிலையை கடைபிடிப்பதே அனைவருக்கும் நல்லதே.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online