Dailyhunt
#BIG BREAKING: சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை..!

#BIG BREAKING: சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை..!

Kalki Online 3 weeks ago

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 9 போலீஸாரும் குற்றவாளிகள் தான் என நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார். இதன்படி இவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

மத்திய, மாநில அரசுகள் குற்றவாளிகளின் செத்து விவரம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யாததால், இந்த வழக்கின் தணடனை விவரம் ஏப்ரல் 2-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னரும் அறிக்கை தாக்கலில் ஏற்பட்ட கால தாமதத்தால் தண்டனை விவரம் ஏப்ரல் 6-ம் தேதி வெளியிடப்படும் என நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார்.

ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட தண்டனை விபரம், இன்று மதியம் மூன்று மணிக்கு அறிவிக்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்தார்.

#JUST IN: அமெரிக்காவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.!

காவல் மரணங்கள் சகித்துக் கொள்ள முடியாத ஒன்று என மாநில அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்பது குற்றவாளிகளுக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி முத்துக்குமரன் வாசித்த தண்டனை விவரத்தில், "பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த சம்பவம் நடந்துள்ளது. எங்கு அதிகாரம் உள்ளதோ, அங்கு பொறுப்பும் அதிகமுள்ளது. மிக அரிதினும் அரிதாக இந்த வழக்கு பார்க்கப்படுகிறது. தந்தை முன் மகனையும், மகன் முன்பு தந்தையையும் காவல்துறையினர் அடித்துள்ளனர்.

குற்றவாளிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதால், கடுமையான குற்றமாகவே கருத வேண்டும். ஆகையால் மரண தண்டனை விதிப்பதே சிறந்தது. மரண தண்டனை விதிப்பதை தவிர வேறு வழியே இல்லை என நீதிமன்றம் கருதுகிறது.

தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரையும் நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர்; வழக்கு விவரங்களை வாசிக்கும் போது மனம் பதை வதைக்கிறது. இது போன்ற வழக்குகளில் காவல்துறையினருக்கு ஆயுள் தண்டனை வழங்கினால் அச்சத்தை ஏற்படுத்தாது.

ஒரே நேரத்தில் தந்தை மற்றும் மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது. ஆகையால் பொருளாதார ரீதியிலான தண்டனையும் வழங்கப்பட வேண்டும். எதிர் காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் இருக்கும் வகையில் தீர்ப்பளிக்க வேண்டும் என நீதிமன்றம் கருதுகிறது.

காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனை மற்றும் ரூபாய் 15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் மற்றும் தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜ், செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ் மற்றும் வெயிலுமுத்து எனஸவழக்கில் சம்பந்தப்பட்ட 9 போலீஸாருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் தொடர்புடைய 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.

வெயிலில் வாடிய கேமராமேனுக்கு விஜய் செய்த மனிதாபிமான செயல்..! வைரலாகும் விஜய்யின் மனிதாபிமான வீடியோ..!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online