Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பொதி சுமக்கும் கழுதைகள் பற்றிய சில தகவல்கள்!

பொதி சுமக்கும் கழுதைகள் பற்றிய சில தகவல்கள்!

Kalki Online 1 year ago
 Donkey

கழுதை பால் மருத்துவ குணம் உள்ளதாக நம்பப்படுவதால் இதற்கு டிமாண்ட் அதிகம்.

 Donkey

பல ஆயிரம் வருடங்களாக பழக்கப்பட்ட கழுதைகள் மனித குலத்திற்கு உதவி செய்து வருகின்றன.

இவற்றைப் பழக்குவது அவ்வளவு சுலபமில்லை. நம்பிக்கை ஏற்பட்டு பழகி விட்டால் இவற்றை கையாள்வது சுலபம்.

 Donkey

இவற்றின் காதுகள் நீளமானவை. தொலை தூர சப்தங்களை கூட துல்லியமாக கேட்க முடியும்.

 Donkey

காடுகளில் வசிப்பவை சுமார் 102 - 145 செமீ மற்றும் வீடுகளில் வளர்ப்பவை 90 - 142 செமீ உயரம் வளரும்.

 Donkey

கழுதைகள் கருப்பு, வெளுப்பு, பிரவுன், சாம்பல் நிறங்கள் கொண்டவை. பொதுவாக மூக்கு பகுதி வெண்மையாக இருக்கும்.

 Donkey

நினைவு ஆற்றல் அதிகம். பல வருடங்களுக்கு பிறகு முன்பு சென்ற இடத்திற்கு சென்றால் அடையாளம் கண்டு பிடித்து விடும் ஆற்றல் கொண்டது.

 Donkey

இவை குதிரைகளை விட வலிமை அதிகம் உள்ளதாலும், பொறுமை மிக்கதாலும், கரடு முரடு இடங்களில் செல்லக் கூடியதாலும் பொதிகள் சுமக்க உபயோகிக்கிறார்கள்.

 Donkey

இவைகளுக்கு நீரில் நனைவது பிடிக்காது. எனவே மழையில் நனைவதை தவிர்த்து விடும்.

 Donkey

கழுதைகள் கூட்டமாக இருப்பதை விட தனியாக இருப்பதை மிகவும் விரும்பும். ஆடுகளுடன் இருப்பது மட்டும் பிடிக்கும்.

Donkey

பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும். ஆபத்தை உணர்ந்தால் அந்த இடத்தை விட்டு நகராமல் நின்று விடும்.

 Donkey

40 வயது வரையில் உயிர் வாழும். சில இடங்களில் அதிக ஆண்டுகள் வாழும்.

 Donkey

கழுதை ஒரே சமயத்தில் அதன் நான்கு கால்களையும் காணும் திறமை படைத்தது.

 Donkey

குட்டியை தாய் சுமார் 12 மாதங்கள் வயிற்றில் சுமக்கும். ஒரு பிரசவத்தில் ஒரே ஒரு குட்டி போடும். குட்டி பெரியதாக வளரும் வரையில் தாயுடன் சேர்ந்து திரியும்.

 mule

ஆண் கழுதைக்கும், பெண் குதிரைக்கும் பிறக்கும் கழுதை கோவேறுக்கழுதை எனப்படும்

 mule

சாதாரண கழுதைகளால் குட்டிகள் போட முடியும். ஆனால் கோவேறுக் கழுதைகளால் குட்டிகள் போட முடியாது.

 mule

கோவேறுக் கழுதைகள் சங்க காலத்தில் அத்திரி, வேசரி என்ற பெயர்களில் அழைக்கப்பட்டதாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

 Otter (Neer Naaigal)நீர் நாய்கள் பற்றிய சில தகவல்கள்!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online