Dailyhunt
#BREAKING: ஒரே இரவில் ஈரானை அழிப்போம்.! எச்சரிக்கை விடுத்த டிரம்ப்.!

#BREAKING: ஒரே இரவில் ஈரானை அழிப்போம்.! எச்சரிக்கை விடுத்த டிரம்ப்.!

Kalki Online 3 weeks ago

மெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவி வரும் கடுமையான போர் காரணமாக, உலக நாடுகள் பலவும் எரிசக்தி தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்கா அதிபர் டிரம்ப் அவ்வபோது ஈரானுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்.

நாளைக்குள் ஹார்மூஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என நேற்று டிரம்ப் எச்சரித்தார். இந்நிலையில் ஒரே இரவில் ஈரானை அழிக்க முடியும்; அந்த இரவு இன்றாக கூட இருக்கலாம் என டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார். இன்று ஹார்மூஸை ஈரான் திறக்காவிடில், கடுமையான தாக்குதல் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#BREAKING: மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து! 40,000 இந்தியர்கள் தவிப்பு.!

அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ஹார்மூஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் இன்று காலை ஈரானை மீண்டும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

னஇதுகுறித்து டிரம்ப் கூறுகையில், "ஹார்முஸ் ஜலசந்தியை இன்று மாலைக்குள் திறக்க வேண்டும். ஹார்முஸை திறக்காவிட்டால் ஈரானில் உள்ள மின்நிலையங்கள், பாலங்களை அழிப்போம். செவ்வாய்க்கிழமை Power Plant Day, Bridge Day ஆக இருக்கும். இதுவரை ஈரானில் 13,000க்கும் மேற்பட்ட இலக்குகளை அழித்துள்ளோம்" என ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஒருவேளை ஈரான் அணு மின் நிலையம் தகர்க்கப்பட்டால், அது வளைகுடா நாடுகளுக்கு கதிரியக்க பாதிப்புகளை ஏற்படுத்தும் என சர்வதேச அணுசக்தி முகமை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

#BIG BREAKING: சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை..!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online