Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
எக்ஸாம் முடிந்த 10-வது நிமிடம் ரிசல்ட் ..!! இந்தியாவையே வியக்கவைத்த பல்கலைக்கழகம்.!

எக்ஸாம் முடிந்த 10-வது நிமிடம் ரிசல்ட் ..!! இந்தியாவையே வியக்கவைத்த பல்கலைக்கழகம்.!

Kalki Online 10 hrs ago

விஸ்வேஸ்வராயா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்(VTU -Visvesvaraya Technologics University)வி.டி.யு )கர்நாடகாவின் பெலகாவியில் உள்ள பொது பல்கலைக்கழகம்.

வி.டி.யு, பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களில் 24 ஆண்டுகாலச் சிறந்து விளங்கும் பாரம்பரியத்துடன், இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

நடைமுறை அனுபவமும் ஆழ்ந்த கோட்பாட்டு அறிவும் கொண்ட, பயிற்சி பெற்ற தொழில்நுட்ப மனிதவளத்திற்கான இந்தியத் தொழில்துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இது 1998 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

விடிஎஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கட்டுப்பாட்டில் தற்போது 200 க்கும் மேற்பட்ட என்ஜினியரிங் கல்லூரிகள் இயங்கி வருகிறது.இந்தப் பல்கலைக்கழகம் தற்போது 182 இணைப்புக் கல்லூரிகள், 1 உறுப்புக் கல்லூரி மற்றும் 25 தன்னாட்சிக் கல்லூரிகளைக் கொண்டுள்ளது. இங்கு 37 துறைகளில் இளங்கலைப் பட்டப்படிப்புகளும், 96 துறைகளில் முதுகலைப் பட்டப்படிப்புகளும், முனைவர் (Ph.D.) மற்றும் எம்.எஸ்சி (பொறியியல்) (M.sc(Engg.)) ஆராய்ச்சித் திட்டங்களும் வழங்கப்படுகின்றன. பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு நிறுவனங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பொறியியல் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

விஸ்வேஸ்வராயா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (VTU),சார்பில் 22-05-2026 அன்று 2026-ம் ஆண்டு தொகுதிக்கான இறுதி தேர்வில் மொத்தம் 56,192 மாணவர்கள் பி.இ மற்றும் பி.டெக் இறுதி செமஸ்டர் தேர்வுகளை எழுதினர்.மாலை 5:30 மணிக்கு கடைசித் தேர்வு முடிந்த10 நிமிடங்களுக்குள், இறுதிப் பருவ BE மற்றும் BTech தேர்வு முடிவுகளை மாணவர்களின் அலைபேசி எண்களுக்கு நேரடியாக அனுப்பி சாதனை படைத்துள்ளது விடியு.56,192 மாணவர்களில் 99.98 சதவீதம் பேர் இறுதிப் பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றனர்.

22-5-26 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்குத் தேர்வு முடிவடைந்த நிலையில்,5.40 மணிக்கெல்லாம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில்,முழு மதிப்பீட்டு செயல்முறையும் எட்டு நாட்களுக்கு முன்பே முடிக்கப்பட்டு, முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது.முன்னதாக, தேர்வு முடிந்த ஒரு மணி நேரத்திற்குள் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த முறை,முடிவுகள் நேரடியாக மாணவர்களின் கைபேசி எண்களுக்கு உடனே அனுப்பப்பட்டன," என்று துணைவேந்தர் கூறினார்.

மேலும் இதனால் மாணவர்கள் உயர் கல்வி படிப்புகள் படிக்கவும் , வேலைக்கு செல்லவும் உதவியாக இருக்கும் என்பதால் இப்படி துரிதமாக ரிசல்ட் வெளியிட்டு வருகிறது பல்கலைக்கழகம் என்கிறார் துணை வேந்தர்.

பொதுவாக கல்லூரிகளில் எழுத்து தேர்வு எனும் தியரி பேப்பர் இறுதியில் நடக்கும், பிராக்டிகல் எனும் செய்முறை தேர்வு முதலில் நடக்கும்.ஆனால் விஸ்வேஸ்ரய்யா பல்கலைக்கழக கட்டுப்பாட்டு கல்லூரிகளில் தியரி பேப்பர் முதலில் முடிந்துவிடும்.அதன் பின்னர் பிராக்டிகல் தேர்வு நடைபெறும்.இதனடிப்படையில் அங்கு தியரி பேப்பர் தேர்வு முன்னதாகவே நடைபெற்றது .மே 19 ம் அதன் தேர்வு தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தயாராக இருந்தது. 22 ம் தேதி இறுதி ஆண்டு தொழில்நுட்ப கல்லூரிகளின் பிராக்டிகல் தேர்வு 5.30 க்கு முடிந்தது இன்டர்னல் மற்றும் எக்ஸ்டர்னல் அக மதிப்பீடு செய்யப்பட்டு தியரி மற்றும் பிராக்டிகல் தேர்வு மதிப்பெண்கள் இணைந்து முடிவுகள் 5.40 க்கு செல் போன் மூலம் வெளியிடப்பட்டது.மற்ற பருவங்களுக்கு, முடிவுகள் பொதுவாக அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.

விடைத்தாள்களை டிஜிட்டல் முறையில் மதிப்பீடு செய்யும் முறையை பல்கலைக்கழகம் பின்பற்றி வருவதாகவும், முடிவுகளை விரைவாக அறிவிக்க முன்கூட்டியே தயாராகியுள்ளதாகவும் பேராசிரியர் உஜ்வல் கூறினார்.ஆசிரிய உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்பாலேயே இது சாத்தியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வி.டி.யு. கடந்த சில ஆண்டுகளாகவே தேர்வு முடிவுகளை விரைவாக அறிவித்து வருகிறது. மே 2025-ல், 50,321 மாணவர்களைக் கொண்ட 2021 தொகுதிக்கான தேர்வு முடிவுகள், தேர்வு முடிந்த ஒரு மணி நேரத்திற்குள் அறிவிக்கப்பட்டன. மே 2024-ல், 37,011 மாணவர்களைக் கொண்ட 2020 தொகுதிக்கான தேர்வு முடிவுகள் மூன்று மணி நேரத்திற்குள் அறிவிக்கப்பட்டன. 2023-ல், 43,662 மாணவர்களைக் கொண்ட 2019 தொகுதிக்கான தேர்வு முடிவுகள், தேர்வு முடிந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டன.

#BREAKING: தவெக-வில் இணைந்தார் இசக்கி சுப்பையா.!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online