Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இதெல்லாம் தெரியாம போச்சே! வாழ்க்கையை எளிதாக்கும் 15 லைஃப் ஹேக்ஸ்!

இதெல்லாம் தெரியாம போச்சே! வாழ்க்கையை எளிதாக்கும் 15 லைஃப் ஹேக்ஸ்!

Kalki Online 2 weeks ago

வீட்டில் தினசரி செய்யும் சிறு வேலைகளை எளிதாக்க பல பயனுள்ள குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. புதிய பாத்திரங்களில் உள்ள ஸ்டிக்கரை எளிதாக நீக்குவது, டூத் பேஸ்ட் மூலம் கண்ணாடி சுத்தம் செய்வது, குழந்தைகளின் தோடு திருகுகளை நெயில் பாலிஷ் மூலம் உறுதியாக வைத்தல், கப்போர்டில் வேப்பிலை வைத்து வெள்ளி மீன்களைத் தடுக்குதல் போன்ற பல சின்ன சின்ன யுக்திகள் இதில் இடம் பெற்றுள்ளன.

1. புது பாத்திரங்களை வாங்கிய பிறகு அந்த ஸ்டிக்கரை பிரித்து எடுக்கப் படாத பாடுபடுவோம். இரண்டு செகண்ட் ஸ்டிக்கர் உள்ள பகுதியை கேஸ் ஸ்டவ்வில் காட்டினால் பசை உருகி ஸ்டிக்கர் தானாக பிரிந்து வந்துவிடும். பிறகு கழுவி பயன்படுத்தலாம்.

2. டூத் பேஸ்ட் தீர்ந்தவுடன் அதன் அடியில் இருக்கும் மீதமான பேஸ்ட்டை அமுக்கி எடுத்து காலண்டர் பேப்பரில் தடவி கண்ணாடிகளை சுத்தப்படுத்தினால் கண்ணாடிகள் ஜொலி ஜொலிக்கும்.

3. சிறு குழந்தைகளுக்கு தோடு போடும் பொழுது அந்தத் தோட்டின் திருகுகளில் நெயில் பாலிஷ் தடவி பிறகு மூடினால் அடிக்கடி லூசாகி விழாமல் இருக்கும்.

4. துணி வைக்கும் கப்போர்டில் காய்ந்த வேப்பிலையை போட்டு வைத்தால் மினுமினுக்கும் வெள்ளி மீன்கள் வராது.

5. மொட்டை மாடியில் உள்ள பூச்செடிகளில் மஞ்சள் பொடி கலந்த தண்ணீரை தெளிக்கலாம். பூச்சிகளால் செடி பாழாகாமல் இருக்கும்.

6. மார்பிள் தரைகளில் சில சமயங்களில் கறைகள் பட்டால் போகாது. அந்த இடங்களில் பேஸ்ட்டை தேய்த்தால் போதும் பளிச்சென்று ஆகிவிடும்.

7. புதுச் செருப்புகள் கடிக்காமல் இருக்க வாங்கியவுடன் செருப்பின் உட்புறத்தில் வாசலின் தடவி ஒரு நாள் முழுவதும் விட்டுவிட வேண்டும். பிறகு உபயோகப் படுத்தினால் கடிக்காது.

 வீட்டு குறிப்புகள்

8. நாம் தினசரி காய்கறி நறுக்கி விட்டு கத்தியை குழாய் தண்ணீரில் கழுவி வைப்போம். அது போல் செய்தால் கத்தி மொக்கையாகிவிடும். ஆனால் ஈரத்துணியால் கத்தியை சுத்தப்படுத்தி பாருங்கள். மொக்கையாகாமல் ஷார்ப்பாகவே இருக்கும்.

9. வளையல்களை அதிகம் வைத்திருப்பவர்கள் கழற்றி ஒரு டப்பாவில் போட்டு வைப்பதை விட ஸ்டாண்டுகளில் மாட்டி வைத்துவிட்டால் ஜோடி மாறாமல் அவசரத்துக்கு எடுத்துக்கொள்ள வசதியாக இருக்கும்.

மரச் சாமான்களைத் தின்னும் கரையான்கள்: நொடியில் விரட்ட எளிய வழிகள்!

10. மழைக்காலத்தில் கருப்பு நிற ஆடைகள் அணிவது நல்லது. அது உள்ளே வெப்பத்தை தக்க வைத்துக் கொள்வதால் குளிரிலிருந்து தப்பிக்கலாம்.

11. ஒரு சிறிய ஸ்பான்ஜில் ஊசிகள் மற்றும் குண்டூசிகளை குத்தி வைத்துவிட்டால் தொலையாமல் பத்திரமாக இருக்கும்.

12. நீண்ட நாள் வெளியூர் சென்று விட்டு வந்து குக்கர் விசில்களை பயன்படுத்தும் பொழுது அவற்றை நன்றாக ஊதிவிட்டு பின்னர் கழுவி உபயோகப்படுத்தினால் அடைப்பு இல்லாமல் இருக்கும்.

13. ஏதாவது லாட்ஜில் தங்கினால் நீங்கள் எப்போது வெளியே செல்கிறீர்கள்... எப்போது திரும்ப வருவீர்கள்... என்ற நேர கணக்கை அங்குள்ள ரூம் சர்வீஸ் பணியாளர்களுக்கு நன்றாகத் தெரியாமல் அதாவது அவர்கள் கணிக்க முடியாதபடி பார்த்து நடந்துகொள்ளுதல் அவசியம்.

சமையலறையில் கரப்பான் பூச்சி தொல்லையா? விரட்டியடிக்க இந்த 5 இயற்கை வழிகள் போதும்!

14. தங்க நகைகள அணிந்து கழற்றி வைக்கும் பொழுது சோப்பு நுரையில் நன்கு அலசி மென்மையான காட்டன் துணியில் துடைத்து பத்திரப்படுத்தி வைத்தால் எப்போதும் பொலிவுடன் இருக்கும். மாற்றி அணிந்து கொள்வதற்கும் சட்டென்று பயன்படுத்திக்கொள்ள வசதியாக இருக்கும்.

15. வெள்ளி நகையை மாற்றி வேறு வெள்ளி நகை வாங்க முடிவெடுத்தால் முன்பு எந்த கடையில் அதை வாங்கினீர்களோ அங்கேயே விற்றால் சரியான விலை கிடைக்கும்.

சமையலறை முதல் பயணப் பாதுகாப்பு வரை அனைத்திலும் தெளிவான வீட்டு குறிப்புகள் விழிப்புணர்வு பெற்று, வீட்டின் ஒவ்வொரு மூலையையும் திறம்பட நிர்வகிக்கும் தன்னம்பிக்கையைப் பெறலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online