Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
காண்டாமிருகங்களின் சாணக் குவியல்கள்: காட்டின் தகவல் தொடர்பு மையம்!

காண்டாமிருகங்களின் சாணக் குவியல்கள்: காட்டின் தகவல் தொடர்பு மையம்!

Kalki Online 21 hrs ago

காண்டாமிருகங்கள் (Rhinoceros) தங்கள் கழிவுகளை (சாணம்) குறிப்பிட்ட ஒரே இடத்தில்தான் கழிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளன.

விலங்கியலில் இந்த இடங்களை "சாணக் குவியல்கள்" (Middens or Latrines) என்று அழைக்கிறார்கள். காண்டாமிருகங்களின் இந்த சுவாரசியமான பழக்கத்தின் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா?

காண்டாமிருகங்களுக்குப் பார்வைத்திறன் மிகவும் குறைவு. ஆனால், அவற்றின் மோப்ப சக்தி (Sense of smell) மிக மிக அதிகம். எனவே, தங்களின் எல்லையை மற்ற காண்டாமிருகங்களுக்கு உணர்த்த இந்த சாணக்குவியல்களை ஒரு 'எல்லைக் கோடாக' பயன்படுத்துகின்றன.

காண்டாமிருகங்கள் தொடர்ந்து ஒரே இடத்தைப் பயன்படுத்துவதால், இந்தச் சாணக் குவியல்கள் சில நேரங்களில் 20 மீட்டர் (சுமார் 65 அடி) அகலம் வரை கூடப் பரவி, ஒரு மினி குன்று போலக் காட்சியளிக்கும். காண்டாமிருகங்கள் தினசரி 20 முதல் 40 கிலோ வரை உணவை உட்கொள்வதால், கழிவின் அளவும் மிக அதிகமாக இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட சாணக் குவியலில் எந்தக் காண்டாமிருகம் சாணம் கழிக்கிறது என்பதை வைத்தே அந்தப் பகுதியின் "தலைவன்" (Dominant Male) யார் என்பதை முடிவு செய்யமுடியும்.

அந்தத் தலைவன், குவியலின் மையப்பகுதியில் சாணம் கழித்து, அதைத் தன் கால்களால் உதைத்து நாலாபுறமும் சிதறடிக்கும். இதன் மூலம் தன் வாசனை அந்தப் பகுதி முழுவதும் தீவிரமாக இருக்க வேண்டும் என்று அது நினைக்கிறது.

இளைய காண்டாமிருகங்கள், குவியலின் ஓரங்களில் மட்டுமே சாணம் கழிக்கும். மேலும், தலைவனுக்குப் பயந்து சாணத்தைச் சிதறடிக்காமல் அப்படியே விட்டுவிடும்.

இந்தச் சாணக்குவியல்கள் காண்டாமிருகங்களின் உலகத்தில் ஒரு "முகநூல்" (Facebook) அல்லது தகவல் பலகை போலச் செயல்படுகின்றன. அந்தப் பகுதிக்கு வரும் பிற காண்டாமிருகங்கள், அங்குள்ள சாணத்தை மோப்பம் பிடிப்பதன் மூலம், அதை அங்கே இட்டது ஆணா அல்லது பெண்ணா?

​அது ஆரோக்கியமாக இருக்கிறதா?

​பெண் காண்டாமிருகம் இனப்பெருக்கத்திற்குத் தயாராக உள்ளதா?

​போன்ற பல முக்கியத் தகவல்களைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ளும்.

குறிப்பாக வெள்ளை காண்டாமிருகங்கள் (White Rhinos) இந்தத் தரைப் பகுதியைத் தங்களின் பொதுவான கழிப்பிடமாகப் பகிர்ந்து கொள்கின்றன. ஒரு காண்டாமிருகம் சாணம் கழித்தவுடன், தன் பின்னங்கால்களால் அதை மிதித்துத் தேய்க்கும். இதனால் அதன் கால்களில் ஒட்டும் சாணத்தின் வாசனை, அது நடந்து செல்லும் பாதையெங்கும் பரவி, மற்ற காண்டாமிருகங்கள் வழியைக் கண்டறியவும் உதவும்.

நுரையீரலே இல்லாமல் சுவாசிக்கும் விசித்திரமான தவளைகள்… இதன் ரகசியம் தெரிஞ்சா மிரண்டுடுவீங்க!

காண்டாமிருகங்களின் இந்த ஒரே இடத்தில் கழிவு கழிக்கும் பழக்கம் காடுகளின் நல்வாழ்விற்குப் பெரிதும் உதவுகிறது.ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் (Nutrients) சேர்வதால், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள தாவரங்கள் மிகவும் செழிப்பாக வளரும்.

சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், ஆப்பிரிக்காவில் உள்ள வனவிலங்குப் பாதுகாவலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், காண்டாமிருகங்களை நேரில் பார்க்காமலேயே, இந்தச் சாணக் குவியல்களின் தன்மையை வைத்தும், அதில் வரும் வாசனையை வைத்தும் அந்தப் பகுதியில் எத்தனை காண்டாமிருகங்கள் வாழ்கின்றன என்பதைக் கணக்கிட்டு விடுகிறார்கள்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online