Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கசவுப் புடவைகள்: கேரளப் பாரம்பரியத்தின் ஓர் அடையாளம்!

கசவுப் புடவைகள்: கேரளப் பாரம்பரியத்தின் ஓர் அடையாளம்!

Kalki Online 10 months ago

சவுப் புடவைகள் என்று அழைக்கப்படும் கேரளப் புடவைகள் கேரளாவின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று. கேரளப் பண்டிகை பொதுவாக கசவு புடவை இல்லாமல் முழுமை அடையாது.

கசவு புடவை வரலாறு

மென்மையான வெள்ளை நிற கைத்தறி பருத்தி துணியே கசவு எனப்படுகிறது. வெள்ளை மற்றும் தங்க நிறத்திலான இந்த புடவைகள் அவற்றின் அமைப்பு மற்றும் தங்க பார்டர் ஆகியவற்றால் தனித்துவமாக விளங்குகின்றன.

இந்த புடவைகளின் நெசவு மற்றும் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஒரு பொருளிலிருந்து இந்த கசவு எனும் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

கேரளா மாநிலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றிய உடை கசவு. அங்கு பெண்கள் 'செட்டு முண்டு' எனப்படும் இரண்டு துண்டு துணிகளை அணிவர். இது 'முண்டும் நேறியதும் ' என்று பிரபலமாக அறியப்படுகிறது.

உடைக்கு புவிசார் குறியீடு

பௌத்த காலத்தில் முண்டும் நெரயதும் பிரபலமடைந்தது. மேலும் அதன் வடிவமைப்பு கிரேக்க - ரோமன் உடையான பால் மைரீனால் ஈர்க்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

கேரளாவில் உள்ள பால ராமபுரம், சேந்தமங்கலம் மற்றும் குத்தாம்புள்ளி ஆகிய மூன்று இடங்களில்தான் இந்த கசவு உடைகள் அதிகம் உற்பத்தி செய்து தயாரிக்கப் படுகின்றன. இதற்காக இப்பகுதிகளுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மகாராஜா பல ராமவர்மா மற்றும் அவரது முதல்வர் உம்மினி தம்பி ஆகியோரின் ஆட்சியின் கீழ் 'முண்டும் நேரியதும் ' கேரளாவில் அறிமுகப் படுத்தப்பட்டது என கூறப்படுகிறது.

இரும்பாலான ஏர் மனிதகுலத்தை எப்படி மாற்றியது?

சாலியா நெசவாளர்கள் பங்கு

திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பாலராமாபுரம் கேரளாவின் சிறந்த பருத்தி கைத்தறி துணிகளுக்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றாகும்.

சாலியா சமூகத்தை சேர்ந்த நெசவாளர்கள் தற்போதைய தமிழ்நாட்டின் நாகர்கோவில், திருநெல்வேலி பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள். திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் தேவைக்காக நதிநவீன முண்டும் நேரியதும் இவர்கள் தயாரித்தார்கள்.

இவர்களிடமிருந்து இந்த தொழில்நுட்பம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் நெசவாளர்களுக்கும் பரவியது என கூறப்படுகிறது. புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவிவர்மா தனது ஓவியங்களில் முண்டும் நெரியத்தும் அணிந்த பெண்களை பாரம்பரிய மற்றும் நவீன பாணியில் சித்தரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கசவு புடவை என்பது பல நூற்றாண்டுகள் பழமையான கேரளாவில் பாரம்பரிய வெள்ளை நிற பருத்தி அல்லது பட்டு கைத்தறி புடவை ஆகும். இது தங்க இழைகளால் ஆன பார்டர்களை கொண்டது. இது கேரளாவின் அடையாளம் மற்றும் கலாச்சார சின்னமாகும். இது செழிப்பு, புனிதத்தன்மை, கருணையை குறிக்கிறது. அரச குடும்பத்தினரிடையே பிரபலமாக இருந்த இந்த புடவை, திருமணங்கள் மற்றும் ஓணம் போன்ற சுப நிகழ்ச்சிகளிலும் அணிந்து மரியாதை செலுத்தப்படுகிறது.

வடிவமைப்பு

கசவு புடவை அதன் எளிமையான வெள்ளை நிறத்திற்கும் இயற்கையான தங்க பார்டருக்கும் பெயர் பெற்றது. பெரும்பாலும் மென்மையான வெள்ளை அல்லது வெண்மை நிற பருத்தி அல்லது பட்டு துணியால் நெய்யப்பட்டிருக்கும்.

ஆறுகளுக்கு எப்படி 'ஆறு' என்று பெயர் வந்தது? உண்மையான அர்த்தம் இதுதான்...

ஓணம் பண்டிகையின்போது இந்த புடவை அணிவது செழிப்பு மற்றும் ஆன்மிகத்தை குறிக்கும் ஒரு பாரம்பரியமாக உள்ளது.

ஓணம் பண்டிகையின்போது கசவு புடவை அணிவது வெறும் ஃபேஷன் மட்டுமல்ல கேரளாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் கொண்டாட்டமாகும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online