Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நெருப்புக் கோழியின் சில சுவாரஸ்ய தகவல்கள்!

நெருப்புக் கோழியின் சில சுவாரஸ்ய தகவல்கள்!

Kalki Online 1 year ago
 Ostrich

பல வகை பறவைகளில் நெருப்புக் கோழி இனமும் ஒன்று. அவற்றைப் பற்றி சில தகவல்கள்.

 Ostrich

இது 8 அடிக்கும் மேல் 9 அடி வரையில் உயரமாக வளரக் கூடியது.

 Ostrich

இவற்றின் எடை 60 முதல் 140 கிலோ இருக்கும். 45 வருடங்கள் உயிர் வாழக் கூடியவை.

 Ostrich

வெகு வேகமாக ஓடக் கூடிய இவற்றால் பறக்க இயலாது.

 Ostrich

நீண்ட கழுத்தை கொண்ட இவை மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.

 Ostrich

நெருப்புக் கோழிகள் ஆப்ரிக்காவின் பூமத்திய ரேகை காட்டு பகுதியிலும், அரைப் பாலவனங்களிலும் வசிக்கின்றன.

 Ostrich

நெருப்புக் கோழிகள் கூட்டமாக வாழும், 10 முதல் 50 கோழிகள் கூட்டமாக இருக்கும்.

 Ostrich

இவை தனது தலையையும், கழுத்தையும் மணலில் பதித்த மாதிரி போஸ் கொடுக்கும் வினோத தன்மை கொண்டது.

 Ostrich

தேவை ஏற்பட்டால் பாதுகாத்துக் கொள்ள வலுவான கால்களால் உதைத்து காயம் ஏற்படுத்தும் வலிமை கொண்டது.

 Ostrich

ஆண் நெருப்புக் கோழி கருப்பு நிறத்திலும், பெண் நெருப்புக் கோழி பழுப்பு நிறத்திலும் இருக்கும்.

 Ostrich

நெருப்புக் கோழிகள் தண்ணீர் குடிப்பது இல்லை. விரும்பி சாப்பிடுவது பழங்கள், கொட்டைகள், பூச்சிகள்.

 Ostrich

இவற்றின் கால்களில் இரண்டு விரல்கள் உள்ளன. அதில் ஒன்றில் மட்டும் நகம் இருக்கும்.

 Ostrich

இவற்றின் முட்டைகள் பெரிய அளவில் இருக்கும்.

 Ostrich

பகலில் பெண் நெருப்புக் கோழிகளும், இரவில் ஆண் நெருப்புக் கோழிகளும் முட்டைகளை அடைக்காக்கின்றன. அடை காக்கும் காலம் சராசரியாக 42 நாட்கள்.

 Ostrich

இவற்றின் முட்டைகளின் ஓடுகள் அலங்கார கலைப் பொருள்கள் தயாரிக்க உபயோகிக்கப்படுகின்றன.

 Ostrich

நெருப்புக் கோழிகளுக்கு ஆப்ரிக்கா, கென்யா, நெதர்லாண்ட் போன்ற நாடுகளில் ஓட்டப் பந்தயங்கள் நடத்தப் படுகின்றன.

 Leo Tolstoy Leo Tolstoy quotes: லியோ டால்ஸ்டாயின் 15 பொன்மொழிகள்!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online