Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஒரு கதை - ஒரு கவிதை - ஒரு கதைக்கவிதை!

ஒரு கதை - ஒரு கவிதை - ஒரு கதைக்கவிதை!

Kalki Online 2 months ago
 MM strip

ஒரு கதை: ரிவர்ஸ் கியர் - 5.0

 கதை | Maid

இரண்டு பிள்ளைகளாகி விட்டன.

செலவுகள் கூடிக் கொண்டே போகின்றன.

கணவனின் பிளம்பர் ஒர்க் வருமானம் போதவில்லை.

மாதா மாதம் கையைக் கடித்தது.

அவள் அதிகம் படிக்கவில்லை.

வீட்டு வேலையே உசிதமென்று முடிவெடுத்தாள்.

ப்ளாட் வீடுகள் வந்ததில் ஒரு வசதி.

ஒரே ப்ளாட்டில் ஐந்தாறு வீடுகளைப் பிடித்து விட்டால் அலைச்சல் மிச்சம்.

தெருத் தெருவாய் அலைய வேண்டாம்.

அவள் படிப்பு கொஞ்சமென்றாலும் புதிதாகச் சிந்திப்பாள்!

வீடு பெருக்குவது, பாத்திரம் கழுவுவது சிரமமானதல்ல.

களத்தில் இறங்கினாள்.

ரெண்டு நான்காயிற்று!

நான்கு எட்டாயிற்று!

எதிர்த்தெதிர்த்த ப்ளாட்டுகளில் வேலை!

ஆறேழு மாதங்களில் அதிக நெளிவு சுளுவுகளைத் தெரிந்து கொண்டாள்.

சைக்கிளில் சுற்றிய பிளம்பர் கணவனுக்கு ஸ்கூட்டர் வாங்கினாள்!

அவனும் அவளை ப்ளாட் வாசலில் இறக்கி விட்ட பிறகே வேலைக்குச் செல்வான்!

வீட்டு வேலைக்கு வரும் பெண்களை வீட்டு உரிமையாளர்களோடு சேர்த்து 'விட்டு'கள் எழுதுவதைக் கூட அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை!

தங்கள் குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு வரும் பெண்களை இழிவு படுத்துவதாகவே அவற்றை நோக்குவாள்!

தன்னைப்போன்ற பெண்களைச் சேர்த்துச் சங்கம் அமைத்துப் போராடினால் என்ன என்று கூட யோசிப்பாள்!

அவன் ப்ளாட் வாசலில் ஸ்கூட்டரை நிறுத்தினான்!

இறங்கிக் கொண்ட அவள் சொன்னாள்...

"உடனே போயிடு! என்னை அழைக்க நீ வர வேண்டாம்! வேலை முடிஞ்சதும் நானே வந்திடறேன்!"

அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள்!'இந்த ப்ளாட்டில இருக்கற ரெண்டு பொம்பளைங்க நடவடிக்கை சரியில்ல. அவரை அடிக்கடி வரச்சொல்றது கூட ஆபத்துதான்!இனிமே நாம சிரமப்பட்டாலும் நடந்தே வந்திடணும்!'

எண்ணியபடியே ப்ளாட்டின் கேட்டைத் திறந்து, லிப்ட் பட்டனை அழுத்தினாள்!

மடியில் கட்டியிருந்த சிறு கத்தி இருக்கிறதாவென்று செக் செய்து கொண்டாள்!

**********

ஒரு கவிதை: வாடாதே உருளையே! வந்திடும் நற்காலம்!

 கதை | potato

உருளைக் கிழங்கே! உருளைக் கிழங்கே!

உலகோர் உயிர்காக்கும் உருளைக் கிழங்கே!

உன்னை அறியாத உலகில் நாடில்லை

மண்ணில்நீயே மலிவான உணவுப் பொருள்!

உழைப்போர் தமக்கு வலிமை சேர்த்து

உயரிய உழைப்பினை நல்கிடச் செய்வாய்!

மிளகாய் மசாலா எண்ணெய் நீரென்று

எளிதாய்க் கூட்டணியை ஏற்படுத்து முந்தன்

குணத்தைப் பார்த்து வியந்து போகின்றோம்!

எதனுடன் இணைந்து நின்றால் என்ன

எந்தன் குணமே மேலோங்கி நிற்கும்

என்ற உந்தன் இயல்பான பிரின்சிபள்

ஏற்றிட வேண்டிய உயர்ந்த இலக்கணம்!

வெள்ளி நகைகள் எப்போதும் புதுசு போல ஜொலிக்க இதைப் பின்பற்றுங்கள்!

சிக்கன் முட்டை உலகம் எங்கும்

சிறப்பான அசைவ உணவு வகைகளாய்

கோலோச்சி நிற்கும் குவலயந் தன்னில்

தனியாகவே நீயும் சைவப் பிரியர்களுக்கு

அரணாய் நிற்கிறாய்! அவர்பசி தீர்க்கிறாய்!

வட்டமாய் நீளமாய் சதுரமாய் செவ்வகமாய்

குச்சியாய் பருமனாய் குழந்தைகளும் விரும்பும்

எல்லா உருவிலும் இனிதாய் வலம்வருகிறாய்!

பெயர்கள் பலவற்றில் பெருமிதம் படைக்கிறாய்!

காடுகள் மலைகள் கவின்நிறை குன்றுகள்

உயரே பறக்கும் உயர்ந்த விமானங்கள்

அத்தனை இடந்தனிலும் ஆஜராகும் உன்னை

ஆம்னிப்ரசண்ட் (Omni present) என்று அழைப்பதே பொருந்தும்!

கொதிக்கும் எண்ணெய் குழிழ்விடும் வெந்நீர்

தகிக்கும் ஃப்ரைபேன் தாளிக்கும் சட்டி

சிறுகதை: மகிழ்ச்சியைப் பரிசளிப்போம்!

எதனில் இட்டாலும் இங்கிதம் அறிந்தே

சுவைதரும் நீ ஒரு சுவர்க்கவிருந்து!

அமெரிக்க ஈரானின் அதிரடிப் போர்களால்

உந்தன் உலகம் சுருக்கப் பட்டதால்

விலைவீழ்ச்சி என்று விவசாயிகள் தேம்பியதைக்

கேட்டே நீயும் சூம்பி வாடினாயோ?

சவலைப் பிள்ளையாய் சருமம் சுருங்கி

சூடான் புருண்டி குழந்தைகள் போலே

உன்னைப் பார்க்கையில் உருகுது மனசு!

தெளிவாய் நீயிரு! திரும்பிடும் எதிர்காலம்!

உன்னை மறந்தால் உலகம் இல்லை!

உருளைக் கிழங்கே! உருளைக் கிழங்கே!

உலகோர் உயிர்காக்கும் உருளைக் கிழங்கே!

வாடிநீ நிற்காதே! வந்திடும் நற்காலம்!

ஒரு கதைக்கவிதை: பொருத்தமானவர்கள்!

 கதை | couple

காதலித்தார்கள்!

வீட்டில் சொன்னார்கள்!

காத்திருந்தார்கள்!

சம்மதம் வந்தது.

சந்திக்க ஆரம்பித்தார்கள்.

அருகமர்ந்து பேசினார்கள்.

எல்லைகளை வகுத்தார்கள்.

இங்கிதமாய் நடந்தார்கள்.

திடீரென்று ஒரு நாள்…

அவள் அறைக்குச் சென்றான்!

-தர்பூசணி சீசனில்!

மாலை சென்றவன்

முன்னிரவில் கிளம்பினான்!

'டின்னருக்கு வெளியில்'

என்றவனை இடைமறித்தாள்!

மேஜையைக் காட்டினாள்!

வாட்டர் மெலோன்…

சிவந்த அவள் முகம்போல!

தயாராய் இருந்தது!

'அதுதான் டின்னர்!'

என்றாள் அவள்!

அரசும் அதிகாரிகளும்

தர்பூசணி விவசாயிகளைக்

கண்டு கொள்ளவில்லை!

நம்மால் முடிந்தஉதவி!

இரவுக்கு அதுவொன்றே!

நகர்ந்தன நாட்கள்.

பணி நிமித்தம்

அருகிலுள்ள இடத்திற்கு

வந்த அவள்

அவன் அறைக்கும்

சிறுகதை: உண்மையான அழகு எது?

விசிட் அடித்தாள்!

'லஞ்சுக்கு நாம்ஒன்றாய்'

என்றே ஆரம்பித்தவளுக்கு

பார்வையாலேயே பதிலிறுத்தான்!

பார்வை பதிந்தஇடத்தில்

நறுக்கிய மாம்பழத்துண்டுகள்!

'மாம்பழ உற்பத்தியாளர்கள்

வருத்தத்தை முழுதாய்

நம்மால் போக்கமுடியாதுதான்!

முடிந்ததைச் செய்யலாமே!'

அவன் சொன்னதை

அவளும் ஆமோதித்தாள்!

மனதால் ஒத்தவர்கள்

மகிழ்ச்சியாய் வாழ்வார்கள்தானே!

இதைவிட வேறு

பொருத்தமென்ன வேண்டும்?!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online