Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சிங்கமா அல்லது குரங்கா? நீங்கள் எதை தேர்வு செய்யப் போகிறீர்கள்?

சிங்கமா அல்லது குரங்கா? நீங்கள் எதை தேர்வு செய்யப் போகிறீர்கள்?

Kalki Online 1 week ago

எந்த சூழ்நிலையிலும் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நம்முடைய தன்னம்பிக்கையும் திடசித்தமும்தான் தீர்மானிக்க வேண்டும்.

ஒரு செயலை எப்படி மேற்கொள்ளப் போகிறோம் என்பதையும் நாம் தான் தீர்மானிக்க வேண்டும். நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே தான் பொறுப்பு. இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை மாற்றிக்கொள்வது சிறப்பு.

வெளியுலகில் எத்தகைய மாற்றங்கள் அல்லது நெருக்கடிகள் வந்தாலும் நம் உள்மனதை அமைதியாக வைத்திருப்பது நம் கையில் தான் உள்ளது. கடினமான காலங்களிலும் மனம் தளர்ந்து விடாமல் சமநிலையுடன் இருக்கப் பழக வேண்டும்.

நம்மைச் சுற்றிலும் சூழல் சரியாக இல்லாதபோதும் நேர்மறையான சிந்தனைகளுடன் இருக்க முயற்சி செய்ய வேண்டும். நடக்கும் நிகழ்வுகளை மாற்ற முடியாவிட்டாலும், அதற்கு நாம் எப்படி எதிர்வினை ஆற்றுகிறோம் என்பதை நாமே முடிவு செய்ய வேண்டும். ஒரு பிரச்னை வரும்போது உடனே கோபமாகவோ அல்லது பதற்றமாகவோ எதிர்வினை ஆற்றாமல், ஒரு நிமிடம் நிதானித்து என்ன செய்ய வேண்டும் என்று பகுத்தறியப் பழக வேண்டும்.

இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி என எது வந்தாலும் அதை ஒருமித்த மனதோடு ஏற்கும் திட சித்தத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்த ஒரு கடினமான சூழ்நிலையும் நிரந்தரமானது அல்ல. "இந்த நேரமும் கடந்து போகும்" என்ற எண்ணம் நமக்கு மிகப்பெரிய மனவலிமையைத் தரும். "என் மகிழ்ச்சிக்கு நான்தான் பொறுப்பு" என்று நாம் முடிவு எடுக்கும்போது மற்றவர்களோ அல்லது சூழ்நிலைகளோ நம்மை எளிதில் காயப்படுத்த முடியாது.

தியானம், யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி போன்ற பழக்கங்கள் சவாலான நேரங்களிலும் நம் மனதை பதற்றமில்லாமல் அமைதியாக வைத்திருக்க பெரிதும் உதவும். சூழ்நிலைகள் நம்மை செதுக்க அனுமதிக்கக்கூடாது. சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் நம் மனப்பக்குவத்தின் மூலம் நாம் யார் என்பதை தீர்மானிக்கப் பழக வேண்டும்.

சிங்கமாக இருக்க விருப்பமா அல்லது குரங்காக இருக்க நினைக்கிறோமா என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். அதற்கு அழகான ஒரு கதை கேட்போமா?

உறவுகளில் நம்பிக்கை உடையும்போது... மனித மனம் எதிர்கொள்ளும் ஆபத்து!

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு 2 சிங்கங்களை விமானத்தில் அங்கிருக்கும் ஜூவிற்கு அழைத்துச் செல்கிறார்கள். அப்படி கொண்டுபோன சிங்கத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் தொடர்ச்சியாக மூன்று வேளையும் வாழைப்பழமே கொடுக்கப்படுகிறது.

பொறுமை இழந்த சிங்கமோ என்னை யார் என்று நினைத்தீர்கள் காட்டுக்கே ராஜா நான். எனக்குப் போய் குரங்குக்கு தரக்கூடிய வாழைப்பழத்தை கொடுக்கிறீர்களே என்று கோபத்துடன் கேட்டது.

ஆனால் அதற்கு அங்கு வேலை பார்க்கும் ஆட்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? நீ சிங்கமாக இருக்கலாம். ஏன் காட்டுக்கே கூட ராஜாவாக இருக்கலாம். ஆனால் நீ வந்திருப்பதோ குரங்கின் பாஸ்போர்ட்டில். அதனால் குரங்குக்கு என்ன கொடுப்போமோ அதைத்தான் கொடுப்போம் என்று சொன்னார்கள்.

 மனவலிமை

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நாம் சிங்கமாக இருந்தாலும் குரங்கின் பாஸ்போர்ட்டில் இருந்தால் அதற்குரிய மரியாதை மற்றும் மதிப்புதான் கிடைக்கும். அதனால் நாம் சிங்கமா அல்லது குரங்கா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் எப்படியும் மாறலாம். ஆனால் அதற்கு நாம் எப்படி எதிர்வினை ஆற்றுகிறோம் என்பதை நாம் மட்டும்தான் தீர்மானிக்க வேண்டும்.

உங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்களா? தேவை முடியும்போது விலகும் போலி உறவுகள்!

வெளி உலக நிகழ்வுகள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும், நம் உள்மனதின் அமைதியும் மகிழ்ச்சியும் முழுமையாக நம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. எனவே நாம் எந்த சூழ்நிலையில் எப்படி தைரியமாக முடிவெடுக்க வேண்டும், தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

எப்படி செயல்பட வேண்டும், சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி மாறவேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். நாம் சிங்கத்தின் பாஸ்போர்ட்டில் வாழப்போகிறோமா அல்லது குரங்கின் பாஸ்போர்ட்டில் வாழப் போகிறோமா என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

வாசகர்கள் தங்கள் உணர்ச்சிகள் மீதான கட்டுப்பாட்டை மீளுருவாக்கிக் கொள்வது எப்படி என்பதையும், கடினமான சூழ்நிலைகளைத் தாண்டி உயர்ந்து நிற்பதையும், தங்களின் சொந்த விதியைத் தீர்மானிக்கும் தடுத்து நிறுத்த முடியாத மனவலிமையை வளர்த்துக் கொள்வதையும் கண்டறிகிறார்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online