Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சிறுகதை: யுவன்!

சிறுகதை: யுவன்!

Kalki Online 1 year ago
 gokulam strip

யுவனுக்கு சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது கொள்ளை ஆசை. இந்தியா ஆடும் மேச் என்றால் அவன் 4 அல்லது 5 வயதிலேயே பார்ப்பான்.

அவருக்கு சச்சின், கங்குலி மற்றும் ஹர்பஜன் சிங் என்றால் ரொம்ப பிடிக்கும்.

அப்பா அவனை ஊக்குவித்தார். ஒரு பிளாஸ்டிக் பேட் மற்றும் ஒரு பிளாஸ்டிக் பந்து வாங்கி தந்தார்.

யுவன் தூள் கிளப்பினான்.

பேட்ஸ் மேன் தான். ஆனால் பெளலிங்கும் வந்தது, ஸ்பின் பெளலிங்கும் போடுவார்.

அப்பா யுவனை கோச்சிங் கேம்ப்பில் சேர்த்து விட்டார்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கோச்சிங் நடக்கும். ஒவ்வொரு வாரமும் அப்பா யுவனை கோச்சிங் கேம்ப்பில் விட்டு விட்டு தான் தனது அலுவலகம் செல்வார்.

இரண்டு மணி நேரம் பயிற்சி நடக்கும். பிறகு அம்மா சென்று யுவனை கூட்டி வருவார்.

5 வயதில் இருந்து 10ம் வகுப்பு வரை கிரிக்கெட் தான். பயிற்சியாளர் யுவன் மீது அபார நம்பிக்கை வைத்து இருந்தார். சில நேரங்களில் போட்டி நடக்கும்.

யுவன் இருந்தால் அந்த டீம் வெற்றி தான். எப்படியோ அரைசதம் அல்லது சதம் அடித்து விடுவார். போததற்கு ஸ்பின் பெளளங்கில் 3 அல்லது 4 விக்கெட் எடுத்து விடுவார்.

பேட்டிங் தோனி போல. பெளலிங் ஹர்பஜன் சிங் போல. கிரிக்கெட்டில் எல்லாம் அறிந்து இருந்தார்.

யுவன் படிப்பிலும் கெட்டிக்காரன். அவனுக்கு ஒரு விஞ்ஞானியாக வர வேண்டும் என்று பெரிய லட்சியம்.

இப்போது அப்பாவிடம் மனம் திறந்து பேசினார்.

"டேட்… நான் இந்த வருடம் கோச்சிங் கேம்ப்பில் இருந்து வெளியே வந்து விடலாம் என்று நினைக்கிறேன். "நான் நன்றாகத் தான் ஆடுகிறேன். எனக்கு கிரிக்கெட் வாழ்வில் கை கொடுக்குமா…? என்று ஒரு சந்தேகம்..!"

"என்னப்பா நீ தான் நன்றாக விளையாடுகிறாய்..!"

"இல்லை அப்பா இந்த வருடம் +1 சேர வேண்டும். +2 பெரிய பரீட்சை. அடுத்த 2 வருடங்கள் தான் என் வாழ்க்கையில் முக்கியமான ஒன்று. படித்து கொண்டே விளையாடுவது சரிப்பட்டு வராது. வாரா வாரம் மேச் இருக்கும். என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. அதனால் தான் இந்த முடிவு எடுத்தேன். கிரிக்கெட் லாட்டரி போல அப்பா. அதை நம்பி படிப்பை கோட்டை விட முடியாது. இல்லை… நான் கிரிக்கெட் தான் போக வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் சொல்லி விடுங்கள்..!"

"ஓ மை சன்... நீ பெரியவன். நீ எடுத்த முடிவு சரி ஆனது தான். ஆம். படிப்பிற்கே கிரிக்கெட் எமனாக வந்து விடும். மாஸ்டர் ஸ்ரீ ராமிடம் உண்மையைச் சொல்லி இந்த வாரத்தில் இருந்தே நீங்கி விடு. ஆம். +1 மற்றும் +2 மிகவும் முக்கியமானது. நல்ல மார்க் வாங்க வேண்டும். அப்போது தான் நாம் நினைக்கும் கோர்ஸ் கிடைக்கும். வெல் டண் மை சன். நீ நன்கு யோசிக்கிறாய்... எனக்கு சந்தோஷம் தான்."

யுவன் முதுகலை இயற்பியல் சென்னை விவேகானந்தர் கல்லூரியில் படித்தார். மாநிலத்தில் முதல் மாணவனாக வந்து தங்க பதக்கம் வாங்கினார்.

அவர் முதுகலை படிக்கும் போது கல்லூரி கிரிக்கெட் டீமில் இடம் கிடைத்தது.

அம்மம்மா..!

அப்பப்பா..!

அவர் தொட்டது எல்லாம் சிக்ஸர். சதம் சர்வ சாதாரணமாக அடித்தார்.

பெளலிங்கில் 4 அல்லது 5 விக்கெட் எடுத்து விடுவார்.

யுக்திகளை சிறு வயதிலிருந்தே கற்றுக் கொண்டவர்.

அவருக்கு அமெரிக்காவில் ஒரு வேலை கிடைத்தது. சம்பளம் மாதம் ₹7 லட்சம்.

யுவன் அவசர படவில்லை.

வேலையில் சேர அவகாசம் கேட்டு இருந்தார். ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழகத்திற்காக விளையாடினார். இல்லை. தூள் கிளப்பினார். அடித்தால் அரைசதம் அல்லது முழு சதம். பெளளங்கில் 4 அல்லது 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கோப்பையை தமிழகம் வென்றது. இறுதி போட்டியில் 'மேன் ஆஃப் தி மேச்' யுவன் தான்.

யுவன் டாக்டரேட் முடித்து விட்டார். அவருக்கு நிறையவே வேலை வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர் எந்த வேலையிலும் சேர வில்லை.

அப்பா கேட்டார்:

"உனக்கு தான் வேலை கிடைத்ததே. அமெரிக்கவோ இந்தியாவோ நல்ல சம்பளம் கிடைக்குமே..?"

"அப்பா நான் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடி வருகிறேன். எப்படியாவது இந்தியா டீமில் சேர்ந்து விட்டால் பணம் தானாக வரும்..!"

சிறுகதை: உணவு!

"நீ தான் கிரிக்கெட் வேண்டாம் என்று சொன்னாய்..!"

"ஆமாம் அப்பா... அது அப்போது. இப்போது எனக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. ஆடி பார்க்கிறேன்."

ரஞ்சி கோப்பை தமிழ்நாடு வெற்றி பெற்றது. அதற்கு முக்கிய காரணம் யுவன் தான். ஊடங்களில் அவர் பெயர் அடிப்பட்டது. மாஸ்டர் பிளாஸ்டர் என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

அடுத்த ஆண்டு உலக ஒரு நாள் போட்டி அறிவிக்கப்பட்டது. இந்திய தேர்வாளர் யுவனை உலக போட்டிக்கு தேர்வு செய்தனர்.

இந்த செய்தியை முதலில் அப்பா, அம்மாவிடம் சொன்னார். எல்லோரும் சந்தோஷம் அடைந்தார்.

உலக கோப்பை இந்தியாவில் தான் நடந்தது.

முதல் முறையாக ஓப்பனிங் பேட்ஸ் மேன் ஆக ஆடினார்.

என்ன அதிசயம்..? தான் ஆடிய முதல் சர்வதேச போட்டியிலே சதம் அடித்தவர் என்ற பெருமை கிடைத்தது.

பெளலிங்கில் 5 விக்கெட் எடுத்தார்.

சந்தேகம் இல்லை. மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் யுவனுக்கு தான் 'மேன் ஆஃப் தி மேச்' கிடைத்தது.

கிடைத்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்து கொண்டார்.

அந்த உலக கோப்பை இந்தியாவிற்கு கிடைக்க காரணம் மாஸ்டர் பிளாஸ்டர் யுவன் தான்.

உலக கோப்பையில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

அடுத்த 9 ஆண்டுகளில் யுவன் செய்த சாதனைகள் பலப்பல. போதுமான பணம் கிடைத்தது. அவர் ₹5000 க்கு ஒரு காசோலை எடுத்துக் கொண்டு கோச் ஸ்ரீ ராம் வீட்டிற்கு சென்று கொடுத்து விட்டு வந்தார். ஸ்ரீ ராம் மிகவும் சந்தோஷம் அடைந்தார்.

சிறுகதை: 'வேலையில்லாப் பட்டதாரி'

ஆம். அவருக்கு கிரிக்கெட்டில் மாஸ்டர் பிளாஸ்டர் ஆகி விட்டார்.

பணம்..

புகழ்...

எல்லாம் கிடைத்தும்...

தலைக்கனமும் இல்லை.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online