காட்டுக்குள் வேட்டையாடச் சென்ற அந்த வேட்டைக்காரர் வீடு திரும்பவில்லை. அவரை சிங்கம் அடித்துக் கொன்று தின்றுவிட்டது.
இதை அறிந்த குடும்பத்தார் அவரை மறந்துவிட்டனர். ஆனால், அவரது கடைசி மகளான சிறுமி அவரை மறக்காமல், 'அப்பா எங்கே?, அப்பா எங்கே?' என்று கேட்டு அழுதுகொண்டே இருந்தாள்.
வேட்டைக்காரரின் மூத்த மகன்கள் மூவரும் மாந்தரீகர்கள். தங்கையின் அழுகையை நிறுத்துவதற்காக அவர்கள் காட்டுக்குச் சென்று தந்தையின் எலும்புகளைத் தேடி எடுத்து வந்தனர். மூத்த மகன் எலும்புகள் யாவற்றையும் சரியாக ஒருங்கிணைத்தான். இரண்டாவது மகன் அதில் சதைகளை சரியானபடி சேர்த்தான். மூன்றாவது மகன் அந்த உடலுக்கு உயிரூட்டினான். அப்படியாக அந்தத் தந்தை மீண்டும் உயிர்த்தெழுந்து வந்தார்.
தான் உயிர்த்தெழ வைக்கப்பட்ட விவரம் அறிந்த அவர், "என்னைப் பிழைக்க வைத்தவருக்கு நான் சிறந்த வெகுமதி தர விரும்புகிறேன்" என்றார்.
"நான்தான் நீங்கள் உயிர்த்தெழுவதற்கு முக்கிய காரணம்" என்று தங்கள் தரப்பைக் கூறினர் மகன்கள் ஒவ்வொருவரும்.
சிறுகதை: யுவன்!தந்தை சொன்னார்:
"நீங்கள் எல்லோரும் என்னை மறந்துவிட்டீர்கள். உங்களின் தங்கை என்னை நினைவு வைத்திருந்து கேட்டதால்தான், என்னை உயிர்த்தெழச் செய்திருக்கிறீர்கள். ஒருவர் எப்போது மற்றவர்களால் மறக்கப்படுகிறாரோ, அப்போது அவர் இறந்துவிட்டதாக அர்த்தம்; யாரேனும் அவரை நினைவில் வைத்திருந்தால், அவர் உயிர் வாழ்வதாக அர்த்தம். எனவே, என்னை மறக்காமல் நினைவு வைத்திருந்த மகளுக்கே அந்த வெகுமதி!"

