Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உடல் எடையைக் குறைக்கணுமா? நுங்கு சாப்பிடுங்க! பலரும் அறியாத நன்மைகள்!

உடல் எடையைக் குறைக்கணுமா? நுங்கு சாப்பிடுங்க! பலரும் அறியாத நன்மைகள்!

Kalki Online 2 months ago

ந்த கோடைக்காலத்தில் கிடைக்கும் தர்பூசணி, வெள்ளரி, மாம்பழம் இவற்றில் உடலுக்கு குளிர்ச்சி தந்து நம் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவது நுங்குதான்.

எங்கும் எளிமையாக, சுவையாக இருக்கும் நுங்கு பலவித மருத்துவ பண்புகளையும் கொண்டுள்ளது.

நுங்கில் வைட்டமின் சி,பி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம் தயாமின், அஸ்பாரிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன.

கோடைக்கால வெயிலின் தாக்கத்தில் உடல் சோர்வடைவதை தடுக்கிறது.உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. நாவறட்சி, தாகத்தைப் போக்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

வயிற்று போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கு நல்ல தீர்வைத் தருகிறது. ரத்த சோகையை போக்கி, உடல் சுறுசுறுப்பை மேம்படுத்துகிறது.

நுங்கில் உள்ள ஆந்த்யூசைன் என்ற ரசாயனப்பொருள் பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. கோடையில் ஏற்படும் அம்மை, அக்கி, தோல் நோய்களுக்கு தடுப்பானாக உடலை பாதுகாக்கிறது.

இளநீர், நுங்கை அடிக்கடி சேர்த்துக்கொள்ள உடல் பொலிவடைவதோடு சொரி, சிரங்கு போன்ற சரும பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க வல்லது.

வியர்க்குரு, வேனல் கட்டி ஏற்பட்டால் நுங்கை அதில் உள்ள நீரோடு அரைத்து சந்தனம் கலந்து பூசி வர நல்ல குணம் கிடைக்கும். நுங்கை தோலுடன் சாப்பிட அதன் முழு சத்துக்களும் கிடைக்கும்.

களைப்பை‌போக்கி, புத்துணர்வுபெற நுங்கு சர்பத், நுங்கு கீர் சாப்பிடலாம். உடல் எரிச்சலை போக்கி கண் சிவத்தலை சரிசெய்கிறது.நுங்கை வைத்து செய்ய சில ரெசிபிகள்.

நுங்கு சர்பத்

தேவையான பொருட்கள்:

நுங்கு5-6, நன்னாரி சர்பத்-1டம்ளர், சுக்கு-1/4, டீஸ்பூன், எ பழச்சாறு -1டீஸ்பூன், சப்ஜா விதை -ஊறவைத்தது-2டீஸ்பூன்.

செய்முறை:

நுங்கை விப்பர் மோடில் அடித்துக்கொண்டு அதனுடன் நன்னாரி சர்பத் சேர்த்து நன்றாக கலக்கவும். இதனுடன் எ சாறு, தேன்-1டேபிள் ஸ்பூன் சேர்த்து சப்ஜா விதை போட்டு நன்கு கலந்து பின் சுக்குத்தூள் தூவி பரிமாறவும்.

விருந்து சாப்பாட்டிற்கு மெருகூட்டும் சுவையான தயிர் பச்சடி வகைகள்!

நுங்கு கீர்

தேவையான பொருட்கள்:

நுங்கு-2கப், பால்-2கப், பாதாம் பிசின் -ஊறவைத்தது-1டீஸ்பூன், தேன் அல்லது சர்க்கரை -தேவைக்கு, குங்குமப்பூ எசென்ஸ் அல்லது விருப்பமான எ சென்ஸ் சில துளிகள், ஐஸ் க்யூப்ஸ்

செய்முறை:

நுங்கு தோலுரித்த தை மிக்ஸியில் போட்டு அதனுடன் பால் சேர்த்து விட்டு விட்டு அடித்துக் கொள்ளவும். பின் பரிமாறும் கிளாஸில் ஊற்றி அதில் பாதாம் பிசின், எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து கலந்து பரிமாறவும்.

நுங்கு பாயாசம்

செய்முறை:

நுங்கு-2கப், இளநீர்1கப், சர்க்கரை அல்லது மில்க்மெய்ட்-1கப், ஏலத்தூள் கிரீம் மில்க்-1கப்.

செய்முறை:

நுங்கை அடித்துக்கொண்டு தனியே வைக்கவும். பாலை நன்கு கொதிக்கவிட்டு திக்கானதும் ஏலத்தூள், மில்க்மெய்ட் சேர்த்து கலந்து இறக்கவும். ஆறியதும் இதனுடன் இளநீர், நுங்கு அடித்தது சேர்த்து நன்கு கலந்து பரிமாறும்போது பாதாம் துருவியதை தூவி அலங்கரித்து பரிமாற சுவையாக இருக்கும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online