Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விருந்து சாப்பாட்டிற்கு மெருகூட்டும் சுவையான தயிர் பச்சடி வகைகள்!

விருந்து சாப்பாட்டிற்கு மெருகூட்டும் சுவையான தயிர் பச்சடி வகைகள்!

Kalki Online 3 months ago

சுரைக்காய் தயிர் பச்சடி

தேவை:

சுரைக்காய் - 100 கிராம்,

தயிர் - ஒரு கப்,

எண்ணெய், கடுகு - தாளிக்க தேவையான அளவு,

பச்சை மிளகாய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

சுரைக்காயை தோல் சீவி துருவவும். தயிரை கெட்டியாகக் கடையவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, தயிரில் சேர்த்துக் கலக்கவும். பின்பு அதே எண்ணெயில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சுரைக்காய், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கிய சுரைக்காய் கலவையை தயிருடன் கலக்கவும். சுவையான சுரைக்காய் பச்சடி ரெடி.

முளைக்கீரை தயிர் பச்சடி

தேவை:

புளிக்காத புது தயிர் - 1 கப்,

முளைக்கீரை - அரை கட்டு,

பச்சை மிளகாய் - 2,

தேங்காய் துருவல் - 2

டேபிள் ஸ்பூன்,

உப்பு - தேவைக்கு.

தாளிக்க:

சீரகம், கடுகு - தலா அரை டீஸ்பூன்,

எண்ணெய் - 1 டீஸ்பூன்

கோடை வெயிலைச் சமாளிக்க… அல்சர் முதல் சளி வரை விரட்டும் 'அதிசய ஜூஸ்' ரெசிபிகள்!

செய்முறை:

முளைக்கீரையை சுத்தம் செய்து, பொடிப் பொடியாக நறுக்குங்கள். தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் மூன்றையும் சேர்த்து அரையுங்கள்.

குக்கரில் அரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து நறுக்கிய கீரையை சேர்த்து வேக வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடுங்கள்.

நன்கு ஆறியதும் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, எண்ணெயைக் காய வைத்து, கடுகு தாளித்து சேர்த்து பரிமாறுங்கள். புதுமையான சுவையில் அசத்தும் முளைக்கீரை தயிர்பச்சடி தயார்.

நெல்லிக்காய் தயிர் பச்சடி

தேவை:

கெட்டித் தயிர் - ஒரு கப்

நெல்லிக்காய் - 6

தேங்காய்த் துருவல்- கால் கப்

பூண்டு - 10 பல் (தோல் நீக்கி சுத்தம் செய்தது)

பச்சை மிளகாய் - 2

மல்லித்தழை - சிறிதளவு

தாளிக்க:

எண்ணெய் - 1 ஸ்பூன்

கடுகு,

உளுத்தம் பருப்பு - தலா கால் ஸ்பூன்

வர மிளகாய் - 2

சீரகம் - கால் ஸ்பூன்

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் நெல்லிக்காய்களை நன்றாக சுத்தம் செய்து வேகவைத்துக்கொள்ள வேண்டும். ஆறியபின், விதைகளை நீக்கி, அதனுடன் தேங்காய், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, பூண்டு ஆகிய அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொர கொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி, கெட்டி தயிர் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். தாளிக்க கொடுத்துள்ள எண்ணெய், கடுகு, உளுந்து, சீரகம், வர மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து தாளித்து, நெல்லிக்காயில் சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்துவிடவேண்டும். சுவையான நெல்லிக்காய் தயிர் பச்சடி ரெடி.

உடல் சூட்டை தணிக்கும் 'மேஜிக்' பானங்கள்! வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

இஞ்சி தயிர் பச்சடி.

தேவை:

இஞ்சி - 50 கிராம்

தேங்காய் துருவல் - ஒரு கப்

பச்சை மிளகாய் - 4

சீரகம் - அரை டீஸ்பூன்

கடுகு - அரை ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

தயிர் - 2 கப்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சுத்தம் செய்த இஞ்சி, தேங்காய் துருவல், பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, உப்பு, தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து தயிர் கலவையுடன் சேர்த்து கலக்கவும். சுவையான இஞ்சி தயிர் பச்சடி ரெடி.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online