Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உலகையே வியக்கவைக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி - ஒரு முழுமையான சுற்றுலா வழிகாட்டி!

உலகையே வியக்கவைக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி - ஒரு முழுமையான சுற்றுலா வழிகாட்டி!

Kalki Online 1 month ago

யாகரா நீர்வீழ்ச்சி என்பது வட அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மற்றும் கனடா ஒண்டாரியோ நாடுகளில் எல்லையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற இயற்கையான நீர்வீழ்ச்சி ஆகும்.

இது அமெரிக்கன் ஃபால்ஸ் ஹார்ஸ் ஷி பால்ஸ் மற்றும் பிரைடல் வெயில் பால்ஸ் ஆகிய மூன்று அருவிகளின் தொகுப்பாகும்.

நியூயார்க் மாநிலத்தில் நயாகரா நீர்வீழ்ச்சி நகரத்தையும் கனடாவில் ஒண்டாரியோவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி நகரத்தையும் பிரிக்கிறது. இது 12000 ஆண்டுகளுக்கு முந்திய பனிப்பாறைகளால் உருவானது. அமெரிக்க பக்கத்திலிருந்து படகு மூலம் அருவியின் மிக அருகில் சென்று பார்க்க முடியும்.

பிரைடல் வெயில் அருவியில் அடிவாரத்தில் பாறை நடைபாதை மூலம் சென்று அனுபவித்து பார்க்கலாம். கனடா பகுதியில் உள்ள ஸ்கை லாங் டவர் மூலம் அருவியின் முழு அழகையும் கண்டு ரசிக்கலாம். தினமும் மாலை வேலைகளில் அருவிகள் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. மே முதல் அக்டோபர் வரை தினமும் இரவு 10 மணிக்கு அமெரிக்க அருவிகளின் மேலே இலவச வான வேடிக்கை நடைபெறுகிறது.

கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு பக்கங்களில் இருந்து அருவியை பார்வையிடலாம். ஆண்டுதோறும் இதனை பத்து மில்லியன் மக்கள் பார்வையிடுகிறார்கள். கனடா அமெரிக்கா எல்லையில் 56 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்துள்ளது. இந்த அருவியின் நீளம் மட்டும் 28 கிலோ மீட்டர் உள்ளது.

இந்த அருவியில் உள்ள 85% நீர் கனடாவில் உள்ள ஹார்ஸ் ஷி பால்ஸ் அருவியில் இடம் பெறுகிறது. நயாகரா அருவி மிகவும் அகலமானது. அமெரிக்காவில் மிகவும் சக்தி வாய்ந்த அருவியாக கருதப்படுகிறது. இதன் மொத்த உயரம் 167 அடி. இந்த அருவியில் பன்னிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.

மின்சாரம் தயாரிப்பில் நயாகரா நீர்வீழ்ச்சி தரும் பங்களிப்பு.

இந்த அருவி மூலம் மின்சாரமும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் பயன்படுகிறது. இதன் மூலம் 4000000 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகிறது. நயாகரா நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் பசுமை பூங்கா அழகுற அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிட ஆண்டுதோறும் ஒரு கோடி மக்கள் வருகின்றனர்.

1846 ஆம் ஆண்டிலிருந்து மக்களை கவர்ந்து வருகிறது. வாழ்க்கையில் ஒருமுறை ஏனும் இந்த அருவியை கண்டு ரசிக்க வேண்டும். இதன் அழகை ரசிக்க வார்த்தைகள் இல்லை.

 நயாகரா நீர்வீழ்ச்சி

நயாகரா நீர்வீழ்ச்சி படகு சவாரியின் திரில்லிங் அனுபவம்.

நீர் வீழ்ச்சியிலிருந்து சில மீட்டர் தொலைவில் படகு மூலம் அழைத்து செல்கிறார்கள். அந்தப் படகில் சுமார் 100 பேர் வரை செல்லலாம். நயாகரா என்பது ஒரு ஆற்றின் பெயர். இதன் மேற்கு கரையில் கனடாவும் கிழக்கு கரையில் அமெரிக்காவும் உள்ளது சுமார் 28 கிலோ மீட்டர் நீளத்தில் அருவி அமைந்துள்ளது. அமெரிக்க அருவியில் 10% தான் நீர் விழுகிறது. மீதி நீர் குதிரை லாட பாறையில் கொட்டுகிறது.

குதிரை லாட அருவி 792 மீட்டர் அகலமும் 53 மீட்டர் உயரமும் கொண்டது. இங்கு தயாரிக்கப்படும் மின் தயாரிப்பு மூலம் சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த மூன்று அருவிகளையும் மெய்டு ஆஃப தி மிஸ்ட் என்பார்கள். இந்த அருவிகளை குதிரை லாட அருவி அருகே சென்று பார்க்க முடியும். நம் உடை நனையாமல் இருக்க நீல நிற நெகிழி ஆடைகளை வழங்குகிறார்கள்.

அமெரிக்கா கனடாவை இணைக்கும் வானவில் பாலஅருவி அருகே உள்ளது. இந்த வானவில் பாலத்தில் நடந்து சென்று அருவியின் அழகை ரசிக்கலாம். இங்கு 1885 இல் அமைக்கப்பட்ட அழகிய பூங்கா உள்ளது.

நாம் சமதளத்தில் இருந்து பார்த்தாலும் உச்சிப்பாறையில் இருப்பதைப் போன்று உணர முடியும். இந்த அற்புதத்தை முதலில் கண்டவர் லூயிஸ் ஹென்னா பின் என்று ஐரோப்பியர் ஆவார்.

நியூயார்க் கனவு: டைம்ஸ் சதுக்கம் முதல் சுதந்திர தேவி வரை!

எல்லா அருவிகளையும் ஹெலிகாப்டர் மூலமும் பறந்து சென்று பார்க்க முடியும். அருவியை சுற்றி அருங்காட்சியகம், கடைகள், உணவு விடுதிகள், சோலைகள், பூங்காக்கள் என நிறைய உள்ளது. கட்டணம் கொஞ்சம் அதிகம் தான். இதன் அழகில் எல்லாம் மறந்து போகும். இந்த அருவி 170 அடி உயரத்திலிருந்து விழுவதால் அதேபோன்று 170 அடி ஆழத்தில் சென்று வருவதால் பாதி ஆகாய அருவியாகவும் பாதி பாதாள அருவியாகவும் காணப்படும்.

இந்த நீர் முழுவதும் இறுதியில் அட்லாண்டிக் கடலை சென்று அடைகிறது. தினமும் இரவு 7:00 மணிக்கு வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் மெய்ட் ஆப் தி மிஸ்ட்.

படகின் மூலம் அருவியின் அருகில் சென்று பார்வையிடலாம். மிகவும் திரில்லிங்காக இருக்கும். அருவியின் இரைச்சல் ஒரு பக்கம் மற்றொரு பக்கம் அதன் நீர் துவாலைகள் நம் மீது பட்டு மெய்சிலிர்கக வைக்கும். இதனை பார்க்கும்போது வேறு ஒரு உலகத்தில் இருப்பது போன்ற தோற்றத்தை உணர முடியும்.

NRI குடும்பங்களின் சாய்ஸ்: ஊட்டியில் சொகுசா? வால்பாறையில் அமைதியா?

இந்த வழிகாட்டி மூலம் நயாகரா நீர்வீழ்ச்சியைப் பற்றிய முழுமையான வரலாற்றுத் தரவுகள் மற்றும் நவீன சுற்றுலா வசதிகளை அறிந்துகொண்டு, ஒரு முழுமையான திட்டமிடப்பட்ட வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளத் தேவையான தன்னம்பிக்கையைப் பெறுவீர்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online