Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வாஷிங் மெஷினில் துர்நாற்றமா? பிளாக் மோல்டை நீக்கி, பளபளப்பாக்க ஈஸி டிப்ஸ்!

வாஷிங் மெஷினில் துர்நாற்றமா? பிளாக் மோல்டை நீக்கி, பளபளப்பாக்க ஈஸி டிப்ஸ்!

Kalki Online 6 months ago

ற்போது அனைவர் வீட்டிலும் அவசியப் பொருளாக வாஷிங் மெஷின் மாறிவிட்டது. இந்த துணி துவைக்கும் இயந்திரங்களின் பொதுவான பிரச்னையாக கருப்பு மோல்ட் (Black Mould) உருவாவதுதான்.

இதனால் உடைகள் மற்றும் இயந்திரம் பாதிப்பதோடு, உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வாய்ப்புள்ளது. அந்த வகையில் கடுமையான ரசாயனங்களைப் பயன்படுத்தாமல் கருப்பு மோல்டை அகற்றுவது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

வாஷிங் மெஷினில் ஈரமான மற்றும் வெப்பமான சூழ்நிலையை கருப்பு மோல்ட் விரும்புகிறது. இது வாஷிங் மெஷினில் கதவு கீழ் பகுதியில் ரப்பர் சீல் மற்றும் டிடர்ஜென்ட் டிராயர் பகுதிகளில் அதிகமாக வளர்ந்து துணி வைக்கும் இயந்திரத்தை அழுக்காகவும் துர்நாற்றம் கொண்டதாகவும் மாற்றுகிறது. அத்தகைய கருப்பு மோல்டை அகற்ற எளிய மூன்று வழிகள் என்னவென்பதைப் பார்க்கலாம்.

Click To Buyஇயற்கை முறையில் உங்கள் மாடி தோட்டத்தை மேம்படுத்த சில சூப்பர் வழிகள்!

1. ரப்பர் சீல் சுத்தம் செய்யவும்: சுத்தமான நீரில் வெள்ளை வினிகர் கலந்து வைத்துக் கொள்ளவும். அந்தக் கலவையில் மென்மையான ஸ்பான்ச்சை தொட்டுக்கொண்டு வாஷிங் மெஷின் கதவு கீழ் பகுதியில் உள்ள ரப்பர் சீல் உள்ளிட்ட அனைத்து இடங்கள் மற்றும் துளைகளையும் சுத்தம் செய்யவும். பிறகு சுத்தமான நீரில் கழுவி மென்மையான துணியில் வாஷிங் மெஷினை உலர்த்தவும்.

2. டிடர்ஜென்ட் டிராயரை சுத்தம் செய்யவும்: வாஷிங் மெஷினில் உள்ள டிடர்ஜென்ட் டிராயரை எடுத்து வெந்நீர் மற்றும் வெள்ளை வினிகர் கலந்த கலவையில் முதலில் ஊற வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து தூய்மையான பிரஷ்ஷை வைத்து டிடர்ஜென்ட் டிராயரை சுத்தம் செய்ய வேண்டும். பின்பு சுத்தமாக தண்ணீரில் கழுவி உலர்த்திய பின்பு வாஷிங் மெஷினில் பொருத்தவும்.

3. வெப்பமான வாஷ் சைக்கிள் இயக்கவும்: ரப்பர் சீல் மற்றும் டிராயர் சுத்தமாகிய பிறகு, வாஷிங் மெஷினை 60 டிகிரிக்கு மேல் வெள்ளை வினிகரை ஊற்றி வெப்பமான வாஷ் சைக்கிளில் துணிகளைப் போடாமல் வெறுமனே இயக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பாக்டீரியா அழிக்கப்பட்டு வாசனையற்றதாக மாறி வாஷிங் மெஷின் சுத்தமாகிவிடும்.

ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் சேர்வதைத் தடுக்க ஒரு சூப்பர் ட்ரிக்!

கருப்பு மோல்ட் உருவாகாமல் தடுக்கும் முறைகள்:

1. வாஷிங் மெஷினில் கருப்பு மோல்ட் உருவாகாமல் தடுக்க இயந்திரத்தை பயன்படுத்திய பிறகு கதவை திறந்து வைக்க வேண்டும்.

2. வாஷிங் மெஷினை பயன்படுத்தும் நேரம் தவிர மற்ற நேரங்களில் நீரில்லாமல் உலர்ந்து இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.

3. வெள்ளை வினிகர் வாஷ் சைக்கிள் மூலம் மாதத்திற்கு ஒருமுறை வாஷிங் மெஷினை சுத்தம் செய்யவும்.

மேற்கூறிய முறைகளைக் கையாள்வதன் மூலம் வாஷிங் மெஷின் எப்போதும் சுத்தமாகவும் துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும்.

உங்களுக்கு புதிய Washing Machine வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கா?Click To Buy
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online