வாழ்க்கை ஒரு வட்டம்னு சொல்லுவாங்க. அதேபோல வீட்டில் வைக்கப்படும் வட்ட வடிவ பொருட்கள் அந்த வீட்டையே தனித்துவமாகவும் கலைநயம் மிக்கதாகவும் மாற்றி விடுகின்றன.
அந்த வகையில் வீட்டிற்கு தேவையான வட்ட வடிவ கலைப்பொருட்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
வட்ட வடிவ கண்ணாடிகள்
வீட்டின் வரவேற்பு அறையில் வட்ட வடிவ கண்ணாடிகளை வைக்கும்போது அந்த இடம் உடனடியாக மென்மையாக மாறுகிறது. மேலும் புதிதாக வருபவர்களுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் காட்சி ஆழத்தை வழங்குகிறது. மேலும் வட்ட வடிவ கண்ணாடிகள் நவீன மற்றும் பாரம்பரிய பாணிகளுக்கு இடையே சமநிலையை வழங்குகிறது.
Click To Buyவட்ட வடிவ காபி டேபிள்
வட்ட வடிவ காபி டேபிள் நவீன வீடுகளில் நிறைவான உணர்வை கொடுக்கின்றன. அதிலும் சிறிய வீடுகளில் இடத்தை சேமிப்பதில் இவை சிறப்பாக செயல்படுகின்றன.
Click To Buyவளைந்த வட்ட வடிவ இருக்கைகள்
வளைந்த வட்ட வடிவ இருக்கைகள் வீட்டிற்கு நேர்த்தியை சேர்க்கின்றன. இவை சிறிய இடங்களிலும் அழகை மிளிர செய்கின்றன.
Click To Buyவட்டமான கம்பளங்கள்
சிறிய இடங்களை விசாலமாக காட்டுவதில் வட்டமான கம்பளங்கள் பெரிதும் உதவி புரிகின்றன. வட்டமான கம்பளங்கள் தரைக்கு அழகு சேர்ப்பதோடு இருக்கை, டைனிங் டேபிள் இருக்கும் இடங்களில் இவை தனித்து காட்சி தருகின்றன. மேலும் அமைதியான மென்மையான சூழலையும் உருவாக்கி புத்துணர்ச்சி தருகின்றன.
Click To Buyவிவாகரத்து வரை செல்ல வேண்டாம்... தினமும் இதைச் செய்தாலே போதும்!வட்ட வடிவ சுவர் கலை, தட்டுக்கள் மற்றும் சட்டங்கள்
வட்ட வடிவ சுவர் கலை, தட்டுகள் மற்றும் சட்டங்கள் சுவர்களுக்கு பாரம்பரிய அழகை கொடுப்பதோடு நேர்த்தியாக காட்சி தரும் கலைப் பொருளாக இருக்கிறது. வரவேற்பறை மற்றும் படுக்கை அறையில் வைக்கும்போது இவை மிகவும் அழகாக இருக்கின்றன.
Click To Buyவளைந்த இடங்கள் மற்றும் வாயில்கள்
வீட்டிற்குள் இருக்கும் வட்ட வடிவ வாயில்கள் நுழைவு பாதையை அலங்கரிக்கவும், சுவர்களை கவர்ச்சிகரமாக காட்டவும் வெகுவாக உதவி புரிகின்றன .சிறிய இடங்களில் உள்ள வளைந்த இடங்கள் வீட்டின் உட்புறத்தில் சமநிலையை சேர்க்கின்றன.
வட்ட வடிவ தொங்கும் விளக்குகள்
வட்ட வடிவ தொங்கும் விளக்குகள் வீட்டிற்கு நேர்த்தியான மென்மையான வெளிச்சத்தை அளிக்கின்றன. மேலும் வீட்டின் உட்புறத்தை வசீகரமாகவும், அமைதியாகவும் மாற்றுகின்றன . பாரம்பரிய கலைநயத்தை விரும்பும் வீடுகளுக்கு இந்த வட்ட வடிவ தொங்கும் விளக்குகள் நிம்மதியான உணர்வை அளிக்கின்றன.
மேற்கூறிய வட்ட வடிவ பொருட்கள் அனைத்தும் வீட்டிற்கு நேர்மறை சக்தியை ஈர்ப்பதோடு வாஸ்து விதிகளின்படி விருப்ப பொருளாகவும் இருக்கின்றன.
Click To Buy
