Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வீட்டின் இந்த 3 இடங்களில் பட்டாசு வச்சா. வெடிச்சு சிதறும் உஷார்!

வீட்டின் இந்த 3 இடங்களில் பட்டாசு வச்சா. வெடிச்சு சிதறும் உஷார்!

Kalki Online 1 week ago

தீபாவளி பண்டிகையின் பொழுது பட்டாசுகளை வீட்டில் பாதுகாப்பாக வைப்பது மிகவும் முக்கியம். விபத்துகளைத் தவிர்ப்பதற்கு இந்த மூன்று இடங்களில் மட்டும் பட்டாசுகளை ஒருபோதும் வைக்கக் கூடாது.

1. சமையலறை:

சமையல் எரிவாயு (LPG), எல்பிஜி சிலிண்டர் அல்லது மைக்ரோவேவ் அவன் போன்ற வெப்பத்தை உருவாக்கும் சாதனங்களும், சூடான பாத்திரங்களும் இருப்பதால் இங்கு பட்டாசுகளை வைப்பது மிகவும் ஆபத்தானது. இங்குள்ள வெப்பம் காரணமாக அவை தானாகவே வெடிக்கும் அபாயம் உள்ளது. இங்கு சமையல் செய்யும் பொழுது ஏற்படும் வெப்பம் அல்லது எதிர்பாராத தீப்பொறி பட்டாசுகளின் மேல் பட்டால் உடனடியாக தீப்பிடித்துக் கொள்ளும். அதேபோல் சமையலறை அலமாரிகளில் உணவுப் பொருட்களுடன் சேர்த்து குறிப்பாக சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய், நெய் போன்ற எளிதில் தீப்பற்றும் பொருட்களுக்கு அருகில் பட்டாசுகளை வைக்கக் கூடாது.

சமையலறை சிங்க் போன்ற தண்ணீர் புழங்கும் இடங்கள் அல்லது குளிர்சாதன பெட்டியின் அருகில் பட்டாசுகளை வைத்தால் அவை ஈரப்பதம் காரணமாக தரம் கெட்டு வெடிக்காமல் போய்விடும். அதேபோல் சமையல் புகையும் வெப்பமும் வெளியேறும் பகுதிகளுக்கு (சிம்னி அல்லது எக்ஸாஸ்ட் ஃபேன்) அருகில் பட்டாசுகளை சேமிக்கக் கூடாது.

2. பூஜை அறை:

பூஜை அறையில் தினமும் விளக்கு ஏற்றுவது, கற்பூரம் காட்டுவது மற்றும் சாம்பிராணி கொண்டு தூபம் போடுவது போன்ற நெருப்பு சார்ந்த வழிபாடுகள் நடப்பதால் இங்கு பட்டாசுகளை வைப்பது ஆபத்தானது. விளக்கு ஏற்றும் பொழுது அல்லது குளிர வைக்கும் பொழுது சிறிய தீப்பொறி பட்டாசுகளின் மேல் பட்டால் கூட விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

 பட்டாசு

எரிந்து கொண்டிருக்கும் ஊதுபத்தியில் இருந்து விழும் சாம்பல் அல்லது பொறி பட்டாசுகளை எளிதில் பற்றவைக்கக் கூடும். பூஜை அறையில் இருக்கும் விளக்குத்திரிகள், கற்பூரம், நெய் அல்லது எண்ணெய் போன்றவை எளிதில் தீப்பற்ற கூடியவை. எனவே பூஜை அறையில் பட்டாசுகளை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

சிவகாசி ஆன்லைன் பட்டாசு மோசடி: தீபாவளிக்கு பணத்தை இழக்காமல் தப்பிப்பது எப்படி?

3. மின்சாரப் பெட்டி (EB Box) அல்லது ஸ்விட்ச் போர்டு அருகில்:

தீபாவளி பட்டாசுகளை மின்சார பெட்டி அல்லது ஸ்விட்ச் போர்டு அருகில் கண்டிப்பாக வைக்கக் கூடாது. மின் கசிவு (Short circuit) அல்லது சிறிய பொறி (Spark) ஏற்பட்டால் கூட அது உடனடியாக பட்டாசுகளில் பற்றிக்கொண்டு பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மின்சாதனப் பொருட்கள், பிளக் பாயிண்டுகளுக்கு அருகில் மற்றும் வயரிங் இருக்கும் இடங்களுக்கு அருகில் பட்டாசுகளை வைக்கக் கூடாது.

அதேபோல் படுக்கை அறையிலும் கட்டிலுக்கு அடியிலும் சிலர் பட்டாசுகளை வைப்பார்கள். இது மிகவும் தவறானது. காரணம் படுக்கையறையில் துணிகள், படுக்கை விரிப்புகள் போன்ற எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் அதிகம் இருக்கும். அத்துடன் காற்றோட்டமும் குறைவாக இருக்கும். எனவே இந்த மூடிய அறைகளில் பட்டாசுகளை வைப்பது விபத்து ஏற்பட வாய்ப்பை உருவாக்கும்.

அத்துடன் பால்கனி மற்றும் ஜன்னல் ஓரம் பட்டாசுகளை வைப்பதை தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் வெளியில் வெடிக்கும் பொழுது ராக்கெட் அல்லது பட்டாசுகளின் தீப்பொறிகள் நம் வீட்டு பால்கனி அல்லது ஜன்னல் வழியாக உள்ளே வர வாய்ப்புள்ளது. எனவே வெளியில் எளிதாகத் தெரியும் இடங்களில் இவற்றை வைப்பதையும் தவிர்க்க வேண்டும்.

வீட்ல கிஃப்ட் பேக்ஸ் குவியுதா? தூக்கி வீசாதீங்க... இப்படி ஸ்மார்ட்டா பயன்படுத்துங்க!

பட்டாசுகளை எங்கு எப்படி வைக்க வேண்டும்?

ஈரப்பதம் உள்ள இடங்களில் பட்டாசுகளை வைக்க அவை நமுத்து போய் வெடிக்காமல் போகலாம். எனவே ஈரப்பதம் இல்லாத, குளிர்ந்த மற்றும் உலர்ந்த அறையில் வைப்பதே பாதுகாப்பானது. வெயில் நேரடியாகப் படாத ஒரு அலமாரி அல்லது அறையில் வைப்பது சிறப்பு.

குழந்தைகள் ஆர்வத்தில் தீப்பெட்டி, மெழுகுவர்த்தி போன்றவற்றுடன் பட்டாசுகளுக்கு அருகில் செல்ல கூடும் என்பதால் அவர்களுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும். குழந்தைகள் விளையாட்டாக பட்டாசுகளை எடுத்து விளையாடாதவாறு, ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பதற்கு அவர்களுக்கு எளிதில் எட்டாத உயரமான அலமாரிகளில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.

பட்டாசுகளை அசல் பேக்கிங்கிலேயே வைத்திருந்து, அவற்றை ஒரு அட்டைப்பெட்டியிலோ அல்லது பிளாஸ்டிக் கொள்கலன்களிலோ மூடி வைப்பது நல்லது.

வாசகர்கள் உடனடியாக தங்கள் வீட்டைச் சோதித்து, சமையலறை மற்றும் பூஜை அறை போன்ற ஆபத்தான மூலைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பட்டாசுகளைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதன் மூலம், வரவிருக்கும் பண்டிகைக் கால விபத்துகளைத் தடுத்து உயிரைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online