Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விமர்சனம்: 29 (2026) - ரொமாண்டிக் டிராமா!

விமர்சனம்: 29 (2026) - ரொமாண்டிக் டிராமா!

Kalki Online 2 weeks ago

ஜிகிர்தண்டா 2, ரெட்ரோ ஆகிய படங்களில் வில்லன் ஆக நடித்த நடிகர் விது நாயகன் ஆக நடிக்கும் முதல் படம் இது.

அயோத்தி, கிஸ் பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி தான் இதிலும் நாயகி. மேயாத மான் (2017), ஆடை (2019) , குளு குளு (2022) ஆகிய படங்களின் இயக்குநர் ரத்னகுமார் தான் இந்தப்பட இயக்குநர்.

ஸ்பாய்லர் அலெர்ட்

கதை நடக்கும் கால கட்டம் 2010.

21 வயதான நாயகிக்கு ஐ.ஏ.எஸ் படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்பதுதான் லட்சியம். ஆனால் இப்போதைக்கு டிகிரி முடித்து விட்டு ஒரு கம்பெனியில் வேலை செய்கிறாள்.

29 வயதான நாயகன் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்து வேலை செய்பவன். அக்ரிகல்ச்சர் டிகிரி முடித்திருந்தாலும் ஐ.டி கம்பெனியில் பணி புரிபவன். இவனுக்கு என்று பெரிதாக லட்சியம் எதுவும் இல்லை.

நாயகன், நாயகி இருவரும் ஒரே கம்பெனியில் பணிபுரிவதால் பழகி, நண்பர்கள் ஆகி காதலர்கள் ஆகிறார்கள்.

ஒரு முறை பேச்சு வாக்கில் உன் லட்சியம் என்ன? என நாயகி நாயகனிடம் கேட்க அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று நாயகன் கூறி விடுகிறான். இந்த விவாதத்தில் இருவருக்கும் மனத்தாங்கல் ஆகி பிரிய இடைவேளை.

இதற்குப்பின் அவரவர் லட்சியப்பாதையில் பயணித்தார்களா? பிரிந்த காதல் ஒன்று சேர்ந்ததா?என்பது தான் மீதித் திரைக்கதை.

நாயகன் ஆக விது நடித்திருக்கிறார். வில்லன் ரோலில் பார்த்த இவரை நாயகன் ஆகப் பார்க்க வித்தியாசமாக இருந்தாலும் போகப் போக கதையின் போக்கில் செட் ஆகி விடுகிறார்.

நாயகி ஆக ப்ரீத்தி அஸ்ரானி பிரமாதமான நடிப்பு. இவர் ஸ்ரீவித்யா, ஷோபனா போல நடனத்தில் தேர்ச்சி பெற்றவர் என்பதால் இவருக்காகவே ஸ்பெஷலாக நடனத்திறமையை வெளிப்படுத்தும் காட்சிகள் அமைத்து ஆட வைத்தது இயக்குநரின் சாமார்த்தியம்.

வில்லன் ஆக மாஸ்டர் மகேந்திரன் பரவாயில்லை ரகம்.

நாயகனின் நண்பன் ஆக வரும் அவினாசின் ஒன் லைனர்கள் கலகலப்பு.

நாயகனின் அம்மாவாக வரும் ஆதிரா, நாயகியின் அம்மாவாக வரும் சிந்து இருவரும் நல்ல குணச்சித்திர நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

இவர்கள் போக மற்ற கதாப்பாத்திரங்களில் நடித்த அனைவருமே கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு மாதேஷ் மாணிக்கம். கடற்கரைக் காட்சிகளில் முத்திரை பதிக்கிறார்.

இசை ஷான் ரோல்டன். 6 பாடல்களில் 3 ஹிட். பின்னணி இசையும் அருமை.

எடிட்டிங் ஆர் எஸ் சதீஷ் குமார். முதல் பாதி நல்ல வேகம். பின் பாதி ஸ்லோ.

திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ரத்னகுமார்.

சபாஷ் டைரக்டர்

  • இதயம் படத்தை வரைவது அவ்வளவு ஈசி இல்லை. நாம ரெகுலராப்பார்க்கும் ஹார்ட் ஷேப் வேற, நிஜ இதயத்தின் வடிவம் வேற என்பதை விளக்கும் இடம் அருமை.

  • கடற்கரையில் மறைந்திருக்கும் ஒரு இடத்தில் நாயகன் தன் காதலை வெளிப்படுத்தும் இடம் கவிதை.

  • காதலின் பயணம் இறுதியில் காமத்தில் தான் முடியும் என்ற கருத்தை கண்ணியமாகக் காட்சிப்படுத்திய விதம் அழகு.

  • பாச்சிலர் ரூம் காட்சிப்படுத்திய யதார்த்தம் பிரமாதம்.

  • காதலை வெளிப்படுத்தும் போது பட்டாம்பூச்சி பறக்கும் விதத்தைக் கவிதையாக சொன்ன தருணம் செம.

  • இயக்குநர் ஒரு விஜய் ரசிகர் என்பதால் படம் முழுக்க விஜய் ரெப்ரன்ஸ் வைத்திருப்பது தியேட்டரில் கொண்டாட்ட மனநிலையைக் காட்டுகிறது.

  • கவித்துவமான காதல் படமாகக் காட்ட சேப்ட்டர் 1 சேப்ட்டர் 2 என பிரித்து வரிசைப்படுத்திய விதம் அருமை.

விமர்சனம்: PATRIOT (2026) - மலையாளம் - சைபர் க்ரைம் ஸ்பை ஆக்சன் திரில்லர்!

லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்

  • இயக்குநர் கவுதம் மேனன் படங்களில் வருவது போல நாயகன் வாய்ஸ் ஓவரில் பேசுவது பல இடங்களில் எரிச்சல்.

  • மாஸ்டர் மகேந்திரனின் கேரக்டர் டிசைன் இன்னும் வலுவாக எழுதி இருக்கலாம். க்ளைமாக்சில் திடீர் எனத் திருந்துவது நம்பும்படி இல்லை.

  • முன் பாதி லவ் ஸ்டோரி ஆகக்கொடுத்து, பின் பாதியில் ட்ராக் மாறுவதை எத்தனை பேர்களால் ஜீரணிக்க முடியுமோ? தெரியவில்லை.

  • திரைக்கதை அமைத்த விதம் பழைய பாணியில் என்பதால் சலிப்பு.

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16 +

சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - ரசிக்க வைக்கும் முதல் பாதி காதல் கதை, சிந்திக்க வைக்கும் பின் பாதி லட்சியப் பயணக்கதை என்பதால் பார்க்கலாம். 80s, 90s கிட்ஸ்க்கு மிகவும் பிடிக்கும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online