விலங்கு என்ற வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் ஹீரோவாக நடித்து வெளிவந்து உள்ள வெப் தொடர் வாரண்ட் (Warrant).
ZEE5 ஒரிஜினல் தளத்தில் வெளியாகி உள்ள இந்த தொடரை விக்னேஷ் நடராஜன் இயக்கி உள்ளார்.
Warrant Web Series | Vignesh Natarajan and Prasanth Pandiyaraj
Warrant Web Series | Vignesh Natarajanஎழுதிய தேர்வுகள் அனைத்திலும் தோல்வியை சந்திக்கிறார் கோட்டை கருப்பு சாமி (பிரசாந்த் பாண்டிய ராஜன்) ஒரு வழியாக போராடி சிபாரிசு மூலமாக போலீஸ் வேலைக்கு செல்கிறார். வேலையில் பல சொதப்பல்களை செய்ய மேல் அதிகாரிகள் கண்டனத்திற்கு ஆளாகிறார். ஒரு நாள் கோட்டை கருப்புசாமி கைது செய்யும் ஒரு குற்றவாளி கோட்டை கருப்பசாமி அடித்ததால் இறந்து விடுகிறார். கோட்டை கருப்பசாமிக்கும் இந்த லாக் அப் மரணத்திற்க்கும் என்ன தொடர்பு? நீதிமன்றம் இவரை தண்டித்ததா? இல்லையா? என்று சொல்கிறது இந்த கதை.
Warrant Web Series | Prasanth Pandiyaraj and Namritha MV
Warrant Web Series | Prasanth Pandiyaraj and Namritha MVஎட்டு எபிசோட்களை கொண்ட இந்த தொடரில் பாசிட்டிவ்வாக பல விஷயங்கள் இருந்தாலும், முதல் பாசிடிவான விஷயம் நடிகர் நடிகைகள் தேர்வு தான். ஒவ்வொரு சிறிய கேரக்டரும் முக்கியத்துவம் பெறும் வகையில் திரைக்கதையை எழுதி இருக்கிறார் டைரக்டர். எழுத்தாளராக வரும் ஹாலோ கந்தசாமி, இன்ஸ்பெக்டராக வரும் அருள் தாஸ், லேடி கான்ஸ்டபிள், நகை திருடன் என பல கதாபாத்திரங்கள் நடிப்பில் வாழ்ந்து இருக்கிறார்கள்.
ஒரு அப்பாவி போலீஸ் காரராக இருந்து சிறிது சிறிதாக கோபம் கொண்ட போலீஸ் காரராக மாறும் பிரசாந்த் பாண்டியராஜன் நடிப்பில் கோட்டை கருப்பசாமியாக அடித்து அதகளம் செய்து உள்ளார். 'Director is more than actor' என்ற வாசகத்தை உண்மையாக்குவதை போல் அடிப்படையில் டைரக்டராக இருக்கும் பிரசன்னா பாண்டியராஜன் நடிப்பு இருந்தது. கிளைமாக்ஸ் காட்சியில் இவரது நடிப்பு தத்ரூபமாக இருக்கிறது. அருள் தாஸ் நடிப்பும், வசனமும் கன கச்சிதம்.
Warrant Web Series | Prasanth Pandiyarajவிமர்சனம்: த்ரிஷ்யம் 3 (2026) - மலையாளம் - க்ரைம் திரில்லர்!எட்டு எபிசோடுகளையும் தனது எட்டிங்கால் கூர்மை செய்திருக்கிறார் ராமர். இவரது கூர்மையை தனது ஒளிப்பதிவால் அழகு படுத்தி இருக்கிறார் அசோக். காவல் துறையை பற்றிய உண்மையான யதார்த்தத்தை சொன்னதோடு மட்டும் இல்லாது நீதிமன்றத்தின் சில நடைமுறைகளையும் புரிய வைக்க முயற்சி செய்துள்ளது இந்த தொடர்.
சில நெகடிவ் பாயிண்ட், மூன்றாவது எபிசோட்டில் இருந்துதான் கதை சூடு பிடிக்கிறது. முதல் இரண்டு எபிசோட்கள் மிகவும் சாதாரணமாக செல்கிறது. அவ்வபோது வரும் கெட்ட வார்த்தைகளை தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சாம் சிஎஸ் பின்னணி இசை சுமார்.
சில நெகடிவ் இருந்தாலும் காவல் துறையினர் தங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டிய தேவையை சொன்ன காரணத்திற்காக இந்த தொடரை பார்க்கலாம்.

