Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆரோக்கியம் நிறைந்த நெல்லிக்காய் சட்னி.., எப்படி தயாரிப்பது?

ஆரோக்கியம் நிறைந்த நெல்லிக்காய் சட்னி.., எப்படி தயாரிப்பது?

Lankasri News 1 month ago

டல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான உணவுகளில் நெல்லிக்காயும் ஒன்று.

நெல்லிக்காயில் வைட்டமின் சி, கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் நிறைந்துள்ளன.

இந்த நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவதை விட, ஆவியில் வேக வைத்து சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.

அந்தவகையில், ஆரோக்கியம் நிறைந்த நெல்லிக்காயில் சட்னி எப்படி செய்வது என்று பாரக்கலாம்.


எலும்புகளை வலுப்படுத்த உதவும் சத்தான லட்டு.., எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்

  • எண்ணெய்- 2 ஸ்பூன்
  • உளுந்து- 2 ஸ்பூன்
  • கடலை பருப்பு- 2 ஸ்பூன்
  • இஞ்சி- 1 துண்டு
  • பூண்டு- 4 பல்
  • வெங்காயம்- 2
  • நெல்லிக்காய்- 4
  • தக்காளி- 2
  • காய்ந்த மிளகாய்- 3
  • புளி- சிறிதளவு
  • உப்பு- தேவையான அளவு
  • கொத்தமல்லி- சிறிதளவு
  • கடுகு- 1 ஸ்பூன்
  • கறிவேப்பிலை- சிறிதளவு

செய்முறை

முதலில் வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உளுந்து, கடலை பருப்பு, இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் அதில் நெல்லிக்காய், தக்காளி சேர்த்து நன்கு வதங்கியதும் காய்ந்த மிளகாய், புளி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

அடுத்து இதனை நன்கு ஆறவைத்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இறுதியாக எண்ணெய்யில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து கலந்தால் சத்தான நெல்லிக்காய் சட்னி தயார்.


முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ள முதலமைச்சர் விஜய் | TVK

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News