ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக எலும்புகளை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்துக் கொள்ள முடியும்.
குறிப்பாக வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்து நிறைந்த உணவுகள் எலும்புகளை பலப்படுத்த மிகவும் உதவியாக அமையும்.
அந்தவகையில், கால்சியம் சத்து நிறைந்த லட்டை வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தித்திக்கும் சுவையில் மால்புவா.., இலகுவாக செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
- ராகி மாவு- 200g
- நெய்- 50g
- வெல்லம்-100g
- வால்நட்- 15
- வெள்ளை எள்ளு- 6 ஸ்பூன்
- கருப்பு எள்ளு- 3 ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு வாணல் வைத்து சூடானதும் அதில் கருப்பு எள்ளு, வெள்ளை எள்ளு மற்றும் வால்நட் சேர்த்து வறுத்து ஆறவைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி கெட்டியாகி வந்ததும் அடுப்பை அனைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்களை கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

