Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கற்றாழை எண்ணெய்.., எப்படி பயன்படுத்துவது?

அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கற்றாழை எண்ணெய்.., எப்படி பயன்படுத்துவது?

Lankasri News 1 month ago

பொதுவாக பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் முடி உதிர்வு.

தூக்கமின்மை, உணவு முறை, மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

அந்தவகையில், அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கற்றாழை எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.


வறண்ட முடியை பட்டுப்போல் மென்மையாக்க உதவும் கற்றாழை.., எப்படி பயன்படுத்துவது?

தேவையான பொருட்கள்

  • கற்றாழை- 2 துண்டு
  • தேங்காய் எண்ணெய்- 1லிட்டர்

எப்படி தயாரிப்பது?

முதலில் கற்றாழையை எடுத்து தண்ணீரில் நன்கு கழுவி அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு வாணலில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து சூடாக்கவும்.

இதற்கடுத்து இதில் கற்றாழையை சேர்த்து நன்கு கொதித்ததும் அடுப்பை அனைத்து குளிர வைக்க வேண்டும்.

பிறகு எண்ணெயில் உள்ள கற்றாழை துண்டுகளை நீக்கிவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து பயன்படுத்தலாம்.

இந்த எண்ணெயை தலைமுடியின் உச்சி முதல் நுனி வரை நன்கு தடவி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.

இறுதியாக மென்மையான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசிக்கொள்ளலாம்.

இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர முடி நன்கு அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News