Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பிரான்சின் Nuclear Umbrella திட்டம் - ரஷ்யா எச்சரிக்கை

பிரான்சின் Nuclear Umbrella திட்டம் - ரஷ்யா எச்சரிக்கை

Lankasri News 1 month ago

ஷ்யா தனது முதன்மை இலக்கு பட்டியியலில், பிரான்சின் Nuclear Umbrella திட்டம் வைக்கப்படும் என எச்சரித்துள்ளது.

ஐரோப்பாவின் மீது Nuclear Umbrella என அழைக்கப்படும் அணு ஆயுத பாதுகாப்பை அமைக்கும் திட்டத்தை பிரான்ஸ் முயற்சித்து வருகிறது.

இயேசு சிலையை தாக்கிய சிப்பாய்., விசாரணை தொடங்கிய இஸ்ரேல் இராணுவம்

இந்நிலையில், எதிர்காலத்தில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டால், ரஷ்யாவின் முதன்மை இலக்குப் பட்டியலில் பிரான்சின் அணு குடை சேர்க்கப்படும் என ரஷ்ய துணை வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் குருஷ்கோ எச்சரித்துள்ளார்.

பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "பிரான்ஸ் தனது அணு ஆயுதங்களை அணு சக்தி இல்லாத மற்ற ஐரோப்பிய நாடுகளில் நிறுவும் வாய்ப்பு குறித்து எங்கள் இராணுவம் தீவிர கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இது எங்கள் பாதுகாப்பு திட்டங்களில் முக்கியமானதாக கருதப்படும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாத தொடக்கத்தில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், பிரான்சின் அணு ஆயுதங்களை அதிகரிக்கும் திட்டத்தையும், ஐரோப்பிய கூட்டாளிகளுடன் தடுப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் முயற்சியையும் அறிவித்திருந்தார்.

அவர், பிரான்சின் அணு நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ள Ile Longue கடற்படை தளத்தில் இருந்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ரஷ்யாவின் இந்த எச்சரிக்கை, ஐரோப்பாவில் பாதுகாப்பு சூழ்நிலையை மேலும் பதற்றமடையச் செய்யும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா-ஈரான் பதற்றம் அதிகரிப்பு., எண்ணெய் விலை 5 சதவீதம் உயர்வு

#Russia #France #NuclearUmbrella #Macron #Geopolitics #EuropeSecurity #BreakingNews #Moscow

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News