Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பிரித்தானிய கிராமம் ஒன்றில் சுமார் 100 வீடுகளிலுள்ளவர்கள் வெளியேற்றம்: பின்னணி

பிரித்தானிய கிராமம் ஒன்றில் சுமார் 100 வீடுகளிலுள்ளவர்கள் வெளியேற்றம்: பின்னணி

Lankasri News 6 days ago

ஸ்கொட்லாந்திலுள்ள கிராமம் ஒன்றில் அமைந்துள்ள சுமார் 100 வீடுகளில் வாழும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

பின்னணி

ஸ்கொட்லாந்திலுள்ள Clackmannanshire என்னும் கிராமத்தில் கடந்த வாரம் திடீரென நில அசைவு ஏற்பட்டுள்ளது.

விடயம் என்னவென்றால், Clackmannanshire கிராமம், நிலக்கரி, வெள்ளி மற்றும் கோபால்ட் சுரங்கங்களுக்கு பெயர் பெற்ற கிராமம் ஆகும். 2015ஆம் ஆண்டுடன் அங்கு சுரங்கப் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன.

ஆக, நில அசைவுக்கு என்ன காரணம், அது நில நடுக்கமா அல்லது முன்னர் சுரங்கம் தோண்டப்பட்ட இடம் என்பதால் அதன் காரணமாக நில அசைவு ஏற்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.

பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

ஆகவே, மக்களுக்கு ஏதேனும் அபாயம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், Clackmannanshire கிராமத்திலுள்ள 97 வீடுகளிலிருந்து மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News