Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

Lankasri News 3 weeks ago

வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு நாடு திரும்பும் பிரித்தானியர்கள், சுமார் மூன்று மணி நேரத்துக்கு முன்பாகவே விமான நிலையத்துக்கு வந்து சேருமாறு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப்பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி, ஐரோப்பிய ஒன்றியத்தின் Entry/Exit System (EES) முழுமையாக அமுலுக்கு வந்துள்ளதை பலரும் அறிந்திருக்கக்கூடும்.

அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தின் Entry/Exit System (EES) திட்டத்தின்படி, ஷெங்கன் பகுதிக்கும், ஷெங்கன் பகுதியிலிருந்தும் குறுகிய கால பயணத்துக்காக பயணிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத மக்கள், எல்லையில் தானியங்கி இயந்திரம் ஒன்றில் தங்கள் கைரேகை, புகைப்படம் (biometric data) போன்றவற்றை பதிவு செய்யவேண்டும்.

பிரெக்சிட்டுக்குப் பிறகு பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றிய நாடு இல்லை என்பதால், ஷெங்கன் பகுதிக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்களும் இந்த EES திட்டத்தின் கீழ் தங்கள் கைரேகை, புகைப்படம் போன்றவற்றை பதிவு செய்யவேண்டும்.


இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் மீது பிரித்தானிய அரசியல்வாதி பகிரங்க குற்றச்சாட்டு

விடயம் என்னவென்றால், ஷெங்கன் பகுதிக்குச் செல்லும்போது எல்லையில் தானியங்கி இயந்திரம் ஒன்றில் தங்கள் கைரேகை, புகைப்படம் போன்றவற்றை பதிவு செய்யவேண்டியுள்ளது போலவே, பிரித்தானியர்கள் நாடு திரும்பும்போதும், மீண்டும் அவர்களுடைய கைரேகை, புகைப்படம் முதலான விடயங்கள் சரிபார்க்கப்படும்.

ஆக, பிரித்தானியர்கள் சுற்றுலா செல்லும்போது மட்டுமல்ல, சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் நாடு திரும்பும்போதும் எல்லைகளில் காத்திருக்கவேண்டியுள்ளது.

இந்நிலையில், Wizz Air விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான Yvonne Moynihan என்பவர், பிரித்தானியர்களுக்கு ஆலோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதாவது, சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் நாடு திரும்பும் பிரித்தானியர்கள், குறைந்தது இரண்டுமுதல் மூன்று மணி நேரத்துக்கு முன்பாகவே விமான நிலையத்துக்கு வந்துவிட்டால், கடைசி நேர தாமதங்களைத் தவிர்க்கலாம் என்று கூறியுள்ளார் Moynihan.

ஆக, விமான நிலையங்களில் EES திட்டத்தின் கீழ் அதிகாரிகள் பயணிகளின் கைரேகை, புகைப்படம் போன்றவற்றை சரிபார்க்க வேண்டியிருக்கும் என்பதால், பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க நேரிடலாம் என்றும், அதனால், முன்கூட்டியே விமான நிலையத்துக்கு வருமாறும், கையில் போர்ட்டபிள் சார்ஜர் மற்றும் தண்ணீர் போன்ற விடயங்களை வைத்துக்கொள்வது உதவும் என்றும் கூறியுள்ளார் Moynihan.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News