Dailyhunt
பிரித்தானியாவின் மிகப்பெரிய சோலார் பண்ணைக்கு ஒப்புதல்- 1,80,000 வீடுகளுக்கு மின்சாரம்

பிரித்தானியாவின் மிகப்பெரிய சோலார் பண்ணைக்கு ஒப்புதல்- 1,80,000 வீடுகளுக்கு மின்சாரம்

Lankasri News 3 weeks ago

பிரித்தானிய அரசாங்கம், லின்கன்ஷையர் மாநிலத்தில் அமைக்கப்படவுள்ள நாட்டின் மிகப்பெரிய சோலார் பண்ணைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Springwell Solar Farm எனப்படும் இந்த திட்டம், லின்கன் மற்றும் ஸ்லீஃபோர்ட் இடையே, நாவன்பி அருகே உருவாக்கப்பட உள்ளது.


ஈரானுடன் கூட்டணி அமைக்கும் அமெரிக்கா: ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்

இந்த சோலார் பண்ணை 1,80,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும் என EDF Power Solutions நிறுவனம் தெரிவித்துள்ளது

1,700 கால்பந்து மைதான அளவுக்கு சமமான பரப்பளவில், சோலார் பண்ணை மற்றும் பேட்டரி சேமிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.

பிரித்தானியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நிகர பூஜ்ஜிய துறை, இத்திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

ஆனால், உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், "சுமார் 4,000 ஏக்கர் நிலம் அழிக்கப்படும். இது ஜனநாயகத்திற்கு எதிரான முடிவு" என்று Springwell Solar Action Group தலைவர் மார்க் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நிகர பூஜ்ஜிய துறை அமைச்சர் மைக்கேல் ஷாங்க்ஸ், "மத்திய கிழக்கு மோதல்களிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். சோலார் மின்சாரம் மலிவானதும், நம் நாட்டின் எரிசக்தி சுதந்திரத்தை உறுதி செய்யும் வழியும் ஆகும்" என்றார்.

"இது லின்கன்ஷையர் மக்களுக்கு துரதிர்ஷ்டவசமான செய்தி. சுற்றுலா துறைக்கும் பாதிப்பு ஏற்படும்" என்று உள்ளூர் கவுன்சிலர் ராப் கெண்ட்ரிக் கூறியுள்ளார்.


போர்நிறுத்தத்திற்கு மத்தியில் திடீரெனெ ஹார்முஸில் கப்பல் போக்குவரத்தை நிறுத்திய ஈரான்

EDF நிறுவனம், புதிய பாதைகள், வேலிகள் மற்றும் சமூக நிதி திட்டங்கள் மூலம் உள்ளூர் மக்களுக்கு நன்மை செய்யப்படும் என உறுதியளித்துள்ளது.

2029-ஆம் ஆண்டில் இந்த சோலார் பண்ணை மின்சாரம் உற்பத்தி செய்யத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

UK largest solar farm 2026, Lincolnshire Springwell Solar Farm, EDF Energy solar project UK, UK renewable energy projects, Net Zero UK solar power,Lincolnshire solar farm approval #SolarEnergy #UKRenewables #Lincolnshire #SpringwellSolar #CleanEnergy #NetZero #GreenPower
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News