ஹார்முஸ் நீரிணையில் ஈரானுடன் இணைந்து சுங்கக்கட்டணம் வசூலிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீண்ட காலமாக நடந்துவரும் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியம் பெரும் அச்சத்தில் இருந்தது.
மின்நிலையங்கள், பாலங்களை காக்க மனித சங்கிலிகளாக உருவெடுத்த ஈரானியர்கள்
இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் "அழகான விடயம்" என்று வர்ணித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணை வழியாக தினசரி சுமார் 120 கப்பல்கள் பயணம் செய்கின்றன என்றும், அவற்றிடமிருந்து சுங்கக்கட்டணம் வசூலிக்க அமெரிக்கா-ஈரான் இணைந்து "Joint Venture" செய்யலாம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

"இது பாதுகாப்பை உறுதி செய்யும். மேலும், பல்வேறு அச்சுறுத்தல்களிலிருந்து காப்பாற்றும் வழியாக இருக்கும்" என அவர் கூறியுள்ளார்.
ஹார்முஸ் நீரிணை, பெர்சியன் வளைகுடாவையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கும் முக்கியமான கடல்பாதையாகும். உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் இதன் பங்கு மிக அதிகம். சில தகவல்களின் படி, ஈரான் ஏற்கனவே சில கப்பல்களிடமிருந்து 2 மில்லியன் டொலர் சுங்கம் வசூலித்து வருவதாக கூறப்படுகிறது.
சுங்கம் வசூலிப்பதன் மூலம் அமெரிக்காவுக்கு தினசரி சுமார் 240 மில்லியன் டொலர் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்படுகிறது.
இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வந்தால், அமெரிக்க இராணுவம் நேரடியாக ஹார்முஸ் நீரிணையை கட்டுப்படுத்த வேண்டிய நிலை உருவாகும். இதனால், உலகளாவிய வர்த்தகத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
கதிர்வீச்சின் தாக்கம் வளைகுடா தலைநகரங்களைத்தான் அழிக்கும் - ஈரான் எச்சரிக்கை

