பிரித்தானியாவில் இந்தியர்கள் குடியேறிகளாக வருவதை வெறுப்பதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ரூபார்ட் லோவ் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரின் சர்ச்சை கருத்து
இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் குறித்து பிரித்தானிய நாடாளுமன்ற சுயேச்சை உறுப்பினர் ரூபார்ட் லோவ் சர்ச்சைக்குரிய கருத்தை ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், பிரித்தானிய மக்களின் வேலை வாய்ப்புகளை பறித்து, இங்கிலாந்து நாட்டின் கலாச்சாரத்தையே இந்திய மற்றும் பாகிஸ்தானிய குடியேறிகள் மாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரூபார்ட் லோவ் ரிஃப்பார்ம் யுகே என்ற அமைப்பிலிருந்து பிரிந்து ரீஸ்டோர் பிரிட்டன் என்ற வலதுசாரி அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
ரூபார்ட் லோவ் X தளத்தில் வெளியிட்ட பதிவில், பிரித்தானிய இளைஞர்களின் வேலைகளை பார்ப்பதற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து லட்சக்கணக்கானவர்களை எதற்காக இறக்குமதி செய்ய வேண்டும்.
மன நல மருத்துவமனையிலிருந்து தப்பிய நோயாளி: நீதிமன்றத்தில் மருத்துவர்கள்
இந்த கருத்திற்காக என்னை இனவாதி என்று முத்திரை குத்துவார்கள், ஆனால் அது குறித்து எனக்கு கவலை இல்லை.
வடமேற்கு இங்கிலாந்தின் பல பகுதிகள் தற்போது ஒரு வெளிநாட்டை போல் காட்சியளிக்கிறது. இது தற்செயல் சம்பவம் இல்லை, இது பழமைவாத அரசியல்வாதிகளால் திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவு என்றும் தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டர் நகரின் முக்கிய வீதிகள் இஸ்லாமியமாகி இருப்பதாகவும் நாடாளுமன்ற சுயேச்சை உறுப்பினர் ரூபார்ட் லோவ் குற்றம்சாட்டியுள்ளார்.

