Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பொலிவியாவில் புதிய காட்டுப் பூனை இனம் கண்டுபிடிப்பு

பொலிவியாவில் புதிய காட்டுப் பூனை இனம் கண்டுபிடிப்பு

Lankasri News 2 days ago

New tiger cat species found in Bolivia: பொலிவியாவில் புதிய காட்டுப்பூனை இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

புதிய காட்டுப்பூனை இனம்

பொலிவியாவின் யுங்காஸ் (Yungas) மலைப்பகுதியில், மேகக் காடுகளில் வாழும் சிறிய காட்டுப் பூனை ஒன்று, புதிய இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

"லியோபார்டஸ் டில்காயோ" (Leopardus tilcayo) என அறிவிக்கப்பட்ட இந்த புலி பூனை, கடந்த நூற்றாண்டுக்கு பிறகு உலகில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் புதிய பூனை இனமாகும். உள்ளூர் மக்கள் இதனை "டில்காயோ" என்று அழைக்கின்றனர்.

புலி பூனை

இது தென் அமெரிக்காவின் பல பகுதிகளில் காணப்படும் புலி பூனைகளின் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த பூனை சுமார் 46 செ.மீ. நீளமும், 1.4 கிலோ எடையும் கொண்டது.

சாதாரண வீட்டுப் பூனையைக் காட்டிலும் சிறியது. இதன் தோல் வெளிர் பழுப்பு நிறத்தில், உடலெங்கும் ஒழுங்கற்ற வடிவிலான புள்ளிகளுடன் காணப்படுகிறது.


ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக கனடாவிற்கு அழைப்பு

அதன் வாழ்க்கை முறைகள் குறித்து விஞ்ஞானிகள் இன்னும் முழுமையான தகவல்களை கொண்டிருக்கவில்லை. ஆனால், அதன் கழிவுகளில் எலிகள் போன்ற சிறிய விலங்குகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், அவை அதன் உணவாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும், கேமரா-வலைகள் மூலம், இது இரவில் அதிகமாகச் செயல்படும் விலங்காக இருக்கலாம் என அறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை முன்னெடுத்த தேசிய புவியியல் ஆராய்ச்சியாளர் பாவ்லா நோகல்ஸ் அஸ்கர்ருன்ஸ், "பொலிவியாவில் காணப்படும் இந்த பூனை, பிரேசிலில் காணப்படும் புலி பூனைகளின் விவரங்களுடன் பொருந்தவில்லை. அதனால், இது தனித்த இனமாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகித்தோம்" என்று கூறினார்.


நடுவானில் அடித்துக்கொண்ட பயணிகள் - லண்டன் டு வங்காளதேச விமானத்தில் பரபரப்பு

DNA ஆய்வுகள் மூலம், புலி பூனைகள் ஐந்து தனித்த இனங்களாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதில், டில்காயோ சுமார் 14 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மற்ற புலி பூனைகளிலிருந்து பிரிந்தது என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பெருவின் யுங்காஸ் பகுதியில் "லியோபார்டஸ் டிக்ரினஸ் ஆன்டிசுயோ" (Leopardus tigrinus antisuyo) என்ற புதிய துணை இனமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு, உலக விலங்கியல் வரலாற்றில் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.


கணவரின் சிறிய தவறால் லொட்டரியில் ரூ.4.5 கோடி வென்ற பெண்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News