Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
போர் மீண்டும் வெடிக்கலாம்., அதற்கு தயாராக இருக்கிறோம்- ஈரான்

போர் மீண்டும் வெடிக்கலாம்., அதற்கு தயாராக இருக்கிறோம்- ஈரான்

Lankasri News 2 weeks ago

ரான் வெளிவிவகார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், அமெரிக்கா மீண்டும் தாக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், போர் மீண்டும் தொடங்கலாம் என்றும், அதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அமெரிக்கா இரண்டு முறை ஈரானை தாக்கியதால், எதிர்காலத்தில் மீண்டும் தாக்குதல் நடக்காது என எந்த உத்தரவாதமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.


கமேனியின் இறுதிச்சடங்கில் இந்தியாவின் பங்கேற்புக்கு ஈரான் நன்றி

அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறும்போதும் தாக்குதல் நடந்ததால், ஈரான் மக்களை அமைதி பேச்சுவார்த்தைகளில் நம்ப வைப்பது கடினமாகி விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"ஒவ்வொரு நிமிடமும் போருக்குத் தயாராக இருக்க வேண்டும். இரண்டு முறை பேச்சுவார்த்தை நடக்கும் போது தாக்கினர். இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்" என அவர் கூறியுள்ளார்.

ஈரான், அணு ஆயுதங்களை உருவாக்கவில்லை என்றும், "ஈரான் எப்போதும் அமைதியான நோக்கத்திற்காகவே அணு பொருட்களை பயன்படுத்துகிறது" எனவும் அவர் விளக்கமளித்தார்.

ஈரான், அணு பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திட்டுள்ளது. மேலும் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா கமேனி வெளியிட்ட மத உத்தரவு (Fatwa) அணு ஆயுதங்களைத் தடை செய்கிறது என அவர் நினைவூட்டினார்.


50 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட தங்க நீர்மூழ்கிக் கப்பல்

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் தலையீடு காரணமாக கப்பல்கள் மீது தாக்குதல் நடந்ததாகவும், "ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பு ஈரானின் பொறுப்பு. ஆனால் அமெரிக்கா ஒப்பந்த விதிகளை மீறுகிறது" எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

காமெனெய் இறுதி ஊர்வலத்தில் மக்கள் பெருமளவில் பங்கேற்றது, ஈரானின் உறுதியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துகிறது என அதிகாரி கூறினார். "அமெரிக்கா தினமும் தாக்குவோம் என்று மிரட்டுகிறது. ஆனால் ஈரான் எப்போதும் தயாராக உள்ளது" என அவர் எச்சரித்தார்.


ஹார்முஸ் நீரிணையில் 24 மணி நேரத்தில் 3 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News