Dailyhunt
ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கினால் 50% வரிவிதிப்பு: டிரம்ப் அதிரடி

ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கினால் 50% வரிவிதிப்பு: டிரம்ப் அதிரடி

Lankasri News 1 week ago

ரானுக்கு ஆயுதங்கள் வழங்கும் அனைத்து நாடுகள் மீது 50% இறக்குமதி வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

டிரம்பின் புதிய இறக்குமதி வரி எச்சரிக்கை

ஈரானுடான இரண்டு வார போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், ஈரானுக்கு எதிரான பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஈரானுடன் இராணுவ ஒப்பந்தம் மேற்கொள்ளும் எந்தவொரு நாடும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 50% வரி செலுத்த வேண்டும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த புதிய 50% வரிவிதிப்பானது உடனடியாக அமுலுக்கு வரும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம்: மக்ரோன் முன்வைத்த கோரிக்கை

இது தொடர்பாக டிரம்ப் தன்னுடைய சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தில், ஈரானுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மீது 50% வரி செலுத்த வேண்டும். இதில் எந்தவொரு விலக்கோ அல்லது விதிவிலக்குகளோ இல்லை என்று டிர்ம்ப் பதிவிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்கா இடையே தற்போது சிக்கலான உறவு நீடித்து வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News