Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஹார்முஸ் நீரிணையில் இந்திய கப்பல் மீது ஈரான் தாக்குதல்

ஹார்முஸ் நீரிணையில் இந்திய கப்பல் மீது ஈரான் தாக்குதல்

Lankasri News 1 month ago

ஹார்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் மூடிய நிலையில், இந்திய கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் 2 இந்திய கப்பல்கள் பின்வாங்கியுள்ளன.

மீண்டும் ஹார்முஸ் மூடல்

லெபனான் - இஸ்ரேல் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், ஒப்பந்தத்தின் படி, ஹார்மோஸ் நீரிணையை திறப்பதாக ஈரான் நேற்று அறிவித்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டாலும், கடற்படை முற்றுகை தொடரும் என அறிவித்தார்.

அமெரிக்காவின் முற்றுகை தொடர்வதால், ஹோர்முஸ் நீரிணை திறந்திருக்காது என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்தார்.

ட்ரம்ப் சொன்ன 7 பொய்கள் - பட்டியலிட்ட ஈரான் சபாநாயகர்

அமெரிக்காவின் முற்றுகை தொடரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரானின் IRGC அறிவித்துள்ளது.

திரும்பி சென்ற இந்திய கப்பல்கள்

இதனையடுத்து, ஓமானுக்கு வடகிழக்கே 20 கடல் மைல் தொலைவில் இருந்த SANMAR HERALD என்ற இந்திய கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பல் மீது, IRGC யை சேர்ந்த 2 படகுகள் துப்பாக்கி சூடு நடத்தியதாக பிரித்தானியா கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) தெரிவித்துள்ளது.

இதில், கப்பல்களுக்கு பெரிய சேதம் ஏற்படவில்லை எனவும், பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, ஹார்முஸ் பகுதியில் இருந்த 2 இந்திய கப்பல்கள் மேற்கு நோக்கிப் பின்வாங்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக டேங்கர் கண்காணிப்புச் சேவைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதில், ஈராக்கில் இருந்து 20 லட்சம் பீப்பாய் எண்ணெயை ஏற்றிச் செல்லும் இந்தியக் கொடி தாங்கிய மிக மெல்லிய சரக்குக் கப்பல் (VLCC supertanker) ஒன்றும் இருந்துள்ளது.

இந்தியக் கப்பல்களை தாக்கப்பட்டதைக் கண்டித்து, டெல்லியில் உள்ள ஈரான் தூதரரை நேரில் அழைத்து முறையான கண்டனத்தை பதிவு செய்து இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News