Dailyhunt
ஹிந்தி திரைப்படத்தை பாராட்டியுள்ள தென்னிந்திய நடிகர்கள்: வட இந்திய நடிகர்கள் மௌனம்

ஹிந்தி திரைப்படத்தை பாராட்டியுள்ள தென்னிந்திய நடிகர்கள்: வட இந்திய நடிகர்கள் மௌனம்

Lankasri News 3 weeks ago

ன்வீர் சிங் நடித்த துரந்தர் திரைப்படத்தின் முதல் பாகம் பெரும் வெற்றியையும் பாராட்டுகளையும் குவித்துள்ள நிலையில், அதன் இரண்டாவது பாகத்துக்கும் பாராட்டுக்கள் குவிகின்றன.

தென்னிந்திய திரைத்துறை பிரபலங்கள் பலர் ஹிந்தி திரைப்படமான துரந்தர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை பாராட்டி வரும் நிலையில், பிரபல ஹிந்தி நடிகர்கள் யாரும் ஏன் பாராட்டுகளைத் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுந்துள்ளது.

ரஜினிகாந்த் பாராட்டு

துரந்தர் திரைப்படத்தை பாராட்டி ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், திரைப்படத்தையும் இயக்குனர் ஆதித்ய தாரையும் புகழ்ந்து தள்ளியதுடன், ஹீரோ ரன்வீருக்கும், திரைப்படக் குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரைப்போலவே, தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த ராஜமௌலி, நாக் அஷ்வின், ராம் சரண், நாகார்ஜுனா, காஜல் அகர்வால், அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு முதலானவர்களும் துரந்தர் இரண்டாம் பாகத்தை பாராட்டியுள்ளார்கள்.


காதலரை திருமணம் செய்த நடிகை ஜனனி - கணவர் யார் தெரியுமா?

ஜவான் திரைப்படம் தென்னிந்தியாவில் ஹிட் கொடுத்தது என்றால், அதன் இயக்குனர் தமிழர், அந்த திரைப்படத்தில் பிரபல தென்னிந்திய நடிகர்கள் இருவர் நடித்திருந்தார்கள்.

ஆனால், துரந்தர் அப்படியல்ல. அது முழுமையாக பாலிவுட் குழு பங்கேற்ற திரைப்படம்.

அப்படியிருந்தும் அதற்கு தென்னிந்திய திரைத்துறை பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துவருகிறார்கள்.


GCC தடை காரணமாக துரந்தர்-2 திரைப்படம் ரூ.100 கோடி இழப்பு

ஆனால், பாலிவுட்டை ஆட்சி செய்பவர்கள் என அழைக்கப்படும் ஷாரூக் கான், ஆமிர் கான், சல்மான் கான் ஆகியோர் துரந்தர் குறித்து எந்த விமர்சனமும் முன்வைக்கவில்லை. அது ஏன் என கேள்வி எழுந்துள்ளது!

இந்நிலையில், வட இந்திய திரைப்பட தயாரிப்பாளரான மாதுர் பந்தார்க்கர், திரையுலகில் ஒற்றுமை இல்லை என நான் எப்போதுமே கூறுவதுண்டு என்கிறார்.

இங்குள்ள நடிகர்கள், திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் துரந்தருக்கு ஆதரவு தெரிவித்திருக்கவேண்டும். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை.

ஆனால், தென்னிந்திய திரையுலகில், சூப்பர் ஸ்டார்கள் துரந்தர் பாகம் இரண்டு வெளியான சில நாட்களுக்குள்ளேயே திரைப்படத்தை பார்த்து அதை வெளிப்படையாக பாராட்டியும் இருக்கிறார்கள்.

ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால், அதனால் நடிகர்கள், டெக்னிஷியன்கள், ஸ்பாட் பாய்ஸ், இசை அமைப்பாளர்கள் என அனைவருக்குமே அது நல்லதுதானே, நாம் வெளிப்படையாக பாராட்டவேண்டும், அமைதியாக இருப்பதால் என்ன சாதிக்கப்போகிறோம் என்கிறார்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News