Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இந்தியா-UAE இடையே பாதுகாப்பு, எரிசக்தி ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா-UAE இடையே பாதுகாப்பு, எரிசக்தி ஒப்பந்தங்கள் கையெழுத்து

Lankasri News 1 week ago

ந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இடையே பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் பொருளாதார துறைகளில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

பிரதமர் நரேந்திர மோடி தனது ஐந்து நாட்கள் வெளிநாட்டு பயணத்தின் முதல் கட்டமாக அமீரகத்திற்கு விஜயம் செய்தார்.

மத்திய அரசுக்கு எதிராக முதல் அறிக்கையை வெளியிட்ட முதல்வர் விஜய்

மோடி மற்றும் அமீரக ஜனாதிபதி ஷேக் முகமது பின் சாயித் அல் நஹ்யான் இடையிலான சந்திப்பில் பாதுகாப்பு ஒத்துழைப்பு, எரிசக்தி பாதுகாப்பு, கப்பல் பழுது பார்க்கும் மையம், LPG நீண்டகால விநியோகம் போன்ற துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

பாதுகாப்பு ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளும் பாதுகாப்பு தொழில்துறை, தொழில்நுட்ப பகிர்வு, புதுமை, கடல் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இணைந்து செயல்பட உள்ளன.

எரிசக்தி ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் பெட்ரோலியக் கையிருப்பு வலுப்படுத்தப்படும். அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் (ADNOC) இந்தியாவில் 30 மில்லியன் பீப்பாய்கள் அளவிற்கு கச்சா எண்ணெய் சேமிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

மேலும், LPG நீண்டகால விநியோக ஒப்பந்தம் இந்தியாவின் சமையல் எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய உதவும். குஜராத்தின் வடிநாரில் கப்பல் பழுது பார்க்கும் மையம் அமைக்க அமீரகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

முக்கியமாக, இந்தியாவின் நிதி துறைகளில் 5 பில்லியன் டொலர் முதலீடு செய்ய அமீரகம் ஒப்புக்கொண்டுள்ளது. இது வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், இரு நாடுகளின் பொருளாதார உறவை வலுப்படுத்தவும் உதவும்.

பிரதமர் மோடிக்கு நடுவானில் F-16 பாதுகாப்பு அளித்த UAE, வைரலாகும் வீடியோ

மத்திய கிழக்கில் நடந்துவரும் போர் தொடர்பில் பேசிய மோடி, அமீரகம் மீது நடந்த தாக்குதல்களை கண்டித்து, "இந்தியா UAE-க்கு தோளோடு தோள் நின்று ஆதரவு தரும்" என தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தங்கள் இந்தியா-UAE உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.

#IndiaUAE #ModiInUAE #DefencePact #EnergySecurity #PetroleumReserves #LPGSupply #UAEInvestment #IndiaForeignPolicy
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News