Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இந்தியாவில் ரத்த சொந்தத்தில் திருமணம் செய்ய தடை? உச்சநீதிமன்றம் பரிந்துரை

இந்தியாவில் ரத்த சொந்தத்தில் திருமணம் செய்ய தடை? உச்சநீதிமன்றம் பரிந்துரை

Lankasri News 1 day ago

Supreme court seeks centre stand on law prohibit marriage between close relatives: இந்தியாவில் ரத்த சொந்தத்தில் திருமணம் செய்ய தடை விதிக்குமாறு கோரிய மனுவில், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியாவில் ரத்த சொந்தத்தில் திருமணம்

அத்தை மகன், மாமா மகள் என நெருங்கிய ரத்த சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வது இந்தியாவில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது.

ஆனால், இத்தகைய திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைக்கு, மரபணு நோய்கள், பிறவிக் குறைபாடுகள் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய ரத்த சொந்தத்தில் திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர், நெருங்கிய ரத்த உறவினர்களுக்கிடையேயான திருமணங்களால் ஏற்படக்கூடிய மருத்துவ மற்றும் சமூக ரீதியான கவலைகளைச் சுட்டிக்காட்டி, அத்தகைய திருமணங்களைத் தடைசெய்யும் ஒரு சீரான சட்டத்தைக் கோரிய மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மேலும், பாரம்பரிய நெருங்கிய உறவினர்களுக்குள் நடைபெற்ற திருமணத்தின் மூலமே தான் பிறந்தவர் எனவும், 40% பார்வை குறைபாட்டுடன் பிறந்தவர் எனவும் மனுவில் குறிப்பிட்டார்.

இந்த மனு, தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.


வி.எஸ்.பாபுவின் உடலை தோளில் சுமந்து சென்ற முதல்வர் விஜய்

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, "இதுபோன்ற ரத்த உறவுகளுக்கிடையான திருமணங்களை நீதிமன்றத்தால் ஒழுங்குபடுத்த முடியாது. திருமணம் என்பது தனி நபர் விருப்பம் சார்ந்த விஷயம்.

ஆனால் சமூக சீர்திருத்த சட்டம் மூலம் இத்தகைய திருமணங்களை ஒழுங்குபடுத்துவது நாடாளுமன்றத்தின் முழு அதிகார வரம்பிற்குள் வருகிறது. நெருங்கி இரத்த உறவுகளுக்கு இடையே நடைபெறும் திருமணங்களை தடுக்கும் வகையில் சட்டம் இயற்றுவதன் அவசியம் குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

இந்த விவகாரத்தில் அரசுக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. விவகாரத்தின் தீவிரத்தை உணர்த்தவே விரும்புகிறோம்.

விவகாரத்தில் பொருத்தமான சட்டம் ஏற்றுவது குறித்து பரிசீலிக்கவும் அல்லது பாடத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விளம்பரங்கள் வழியாக இதுகுறித்த விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மத்திய அரசுக்கு உணர்த்தும் நோக்கில் மட்டுமே நோட்டீஸ் அனுப்புகிறோம்" என தெரிவித்துள்ளது.

மத்திய அரசு தனது பதிலை தாக்கல் செய்த பிறகு, மேலதிக விசாரணைக்காக இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News