Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இந்தியாவிலிருந்து பெட்ரோல் வாங்கும் ரஷ்யா., உக்ரைனின் தாக்குதலால் மோசமடைந்துள்ள நிலைமை

இந்தியாவிலிருந்து பெட்ரோல் வாங்கும் ரஷ்யா., உக்ரைனின் தாக்குதலால் மோசமடைந்துள்ள நிலைமை

Lankasri News 3 weeks ago

ஷ்யாவில் சமீபத்தில் ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க, இந்தியாவிலிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ராய்ட்டர்ஸ் வெளியிட்ட தகவலின்படி, குறைந்தது 60,000 மெட்ரிக் டன் பெட்ரோல் இந்தியாவிலிருந்து ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


ஜேர்மனியில் உயர் கல்வி: இந்திய மாணவர்களுக்கு புதிய டிஜிட்டல் தேர்வு அறிமுகம்

உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டதால் இந்த எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், ரஷ்யாவின் பல பகுதிகளில் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள், விலையேற்றம் மற்றும் ரேஷன் முறையில் விநியோகம் நடைமுறையில் உள்ளது.

தகவலின்படி, இந்தியாவிலிருந்து இரண்டு எண்ணெய் கப்பல்கள் தலா 30,000 முதல் 40,000 டன் பெட்ரோல் ஏற்றிச் சென்றுள்ளன.

மேலும், ரஷ்யா மாதத்திற்கு 400,000 டன் பெட்ரோல் பல்வேறு நாடுகளிலிருந்து, குறிப்பாக பெலாரஸ் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.



ரஷ்யாவில் கோடை காலத்தில் தினசரி 110,000 டன் பெட்ரோல் தேவைப்படுகிறது. இதனால், இந்தியாவிலிருந்து கிடைக்கும் பெட்ரோல், அந்த நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்ய அரசு, எரிபொருள் இறக்குமதிக்கு வரி சலுகைகள் மற்றும் உதவித்தொகைகள் வழங்கும் வகையில் சட்ட திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதேசமயம், இந்தியாவின் ரஷ்யா எண்ணெய் இறக்குமதி ஜூன் மாதத்தில் சாதனை அளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்த நடவடிக்கை, ரஷ்யா-இந்தியா உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, உலக எரிசக்தி சந்தையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது.


கனடாவில் Sevmia மருந்துக்கு அனுமதி- உடல் எடை குறைக்கும் மருந்து விலை குறைய வாய்ப்பு

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News