இரத்த சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாகும் ஒரு நிலை ஆகும்.
இது இன்சுலின் உற்பத்தி செய்யாதபோது அல்லது உடல் அதனை பயன்படுத்தாதபோது ஏற்படுகிறது.
உணவு கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.
சிறுநீரக பிரச்சனைகளை எச்சரிக்கும் 5 அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?
அதன்படி, இரும்புச்சத்து நிறைந்த முருங்கை இலைகள் சர்க்கரையை நிரந்தரமாகக் கட்டுக்குள் வைப்பதில் உதவியாக இருக்கும்.
அந்தவகையில், இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் முருங்கை இலை டீ எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முருங்கை இலை- ½ கைப்பிடி
- தண்ணீர்- 2 கப்
- இஞ்சி - 1 சிறிய துண்டு
- தேன்- 1 ஸ்பூன்
எப்படி தயாரிப்பது?
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அதில் இஞ்சியை துருவி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
கொதித்து வரும் வேலையில் அதில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கை இலைகளை சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்கின்ற தண்ணீர் பாதி அளவிற்கு சுண்டும் வரை கொதிக்க விடவும்.
பின் இதை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
இந்த பணத்தை தொடர்ந்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.

