Vaiko explains clash with minister parthiban: வி.எஸ்.பாபுவின் இறுதிச்சடங்கில் பார்த்திபனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கமளித்துள்ளார்.
அமைச்சர் பார்த்திபனுடன் வைகோ வாக்குவாதம்
நேற்று மறைந்த தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு இறுதி ஊர்வலத்தில், முதலமைச்சர் விஜய் அருகே நின்றுகொண்டிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனுடன் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியானது.

இந்நிலையில், இன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வைகோவிடம் அமைச்சர் பார்த்திபனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "முதலமைச்சர் விஜய் தன்னுடன் நடந்து வருமாறு என்னை அழைத்ததால் அவருடன் சென்றேன். அவர் மீது துரும்பு கூட படாமல் நான் பாதுகாப்பாக அவரை வழிநடத்தி ஒழுங்காக சென்றுகொண்டிருந்தேன்.

நான் கொடுக்கும் பாதுகாப்பை 100 பேர் சேர்ந்து கூட கொடுக்க முடியாது. கூட்ட நெரிசலில் யாரோ ஒருவர் தேவையில்லாமல் குறுக்கே புகுந்து என் கையைப் பிடித்து இழுத்தார்.
வி.எஸ்.பாபுவின் உடலை தோளில் சுமந்து சென்ற முதல்வர் விஜய்
அவர் யார் என்றே எனக்குத் தெரியாது. அமைச்சரா என்றுகூட தெரியாது. அதனால் உன் வேலையை பார்த்துட்டு போ என்று கூறினேன். யாரையும் நான் தள்ளிவிடவில்லை" என தெரிவித்தார்.
இருப்பினும், அமைச்சர் பார்த்திபன் முதல்வர் விஜய் உடன் நீண்ட காலமாக பயணித்து வருபவர் என்பதால், அவரிடம் வைகோ நடந்துகொண்ட விதம் தவெக தொண்டர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

