ஜேர்மனியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது இரண்டு பேர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மன் மருத்துவமனையில் தீ
வடக்கு ஜேர்மனியிலுள்ள Ludwigslust நகரில் அமைந்துள்ள ஒரே மருத்துவமனையில் இன்று காலை தீப்பிடித்துள்ளது.
மருத்துவமனையின் கூரை அமைப்பில் பற்றிய தீ பரவியதில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளார்கள். 30க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளார்கள்.
உயிரிழந்த இருவரும், அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனியின் முதல் பெண் சேன்ஸலருக்கு அளிக்கப்பட்டுள்ள கௌரவம்
160 படுக்கைகளைக் கொண்ட அந்த மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தைத் தொடர்ந்து, அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளும் அங்கு பணி செய்து வந்த பணியாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
எப்படி தீப்பிடித்தது என்பது இதுவரை தெரியவராத நிலையில், அந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

