Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கருப்பான முகத்தை உடனடியாக பொலிவாக்க உதவும் மஞ்சள்.., எப்படி பயன்படுத்துவது?

கருப்பான முகத்தை உடனடியாக பொலிவாக்க உதவும் மஞ்சள்.., எப்படி பயன்படுத்துவது?

Lankasri News 1 week ago

பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.

இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.

மஞ்சள் தூள் முகத்திற்கு எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது.


நரைமுடியை கருப்பாக்க உதவும் காபி பொடி.., எப்படி பயன்படுத்துவது?

இது கிருமி நாசினி, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஒரு அதிசய மூலிகையாகும்.

இது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள், மற்றும் சுருக்கங்களைக் குறைத்து முகத்தை பொலிவாக்க உதவுகிறது.

அந்தவகையில், முகப்பொலிவை அதிகரிக்க மஞ்சளை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

1. தேவையான பொருட்கள்

  • மஞ்சள்- 1 ஸ்பூன்
  • அரிசி மாவு- 1 ஸ்பூன்
  • பால்- 5 ஸ்பூன்
  • தேன்- 2 ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது?

முதலில் ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, மஞ்சள் தூள், தேன் மற்றும் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

இந்த பேஸ்பேக்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தி வந்தால், முகம் பொலிவாக இருக்கும்.

2. தேவையான பொருட்கள்

  • மஞ்சள்- 1 ஸ்பூன்
  • கடலை மாவு- 1 ஸ்பூன்
  • தயிர்- 3 ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது?

முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவை எடுத்து, அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதில் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.


இயற்கையாக முகத்தை பொலிவாக்க உதவும் பீட்ரூட்.., எப்படி பயன்படுத்துவது?

அடுத்து அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊறவைத்து பிறகு குளிர்ந்த நீரால் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.

இந்த பேஸ்பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் நீக்கி, முகத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News