குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த லட்டை விரும்பி சாப்பிடலாம்.
அந்தவகையில், கேரளா மட்டை அரிசியில் செய்யப்படும் இந்த லட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தித்திக்கும் சுவையில் பாரம்பரிய பாசிப்பருப்பு உருண்டை.., எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
- மட்டை அரிசி- 1 கப்
- வெல்லம்- ¾ கப்
- தேங்காய்- 1¼ கப்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் மட்டை அரிசியை 2 முறை நன்கு கழுவி உலர வைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அடுப்பில் ஒரு வாணல் வைத்து மட்டை அரிசியை மிதமான தீயில் வைத்து வறுக்கவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த ஆறவைத்த அரிசியை பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக ஒரு தட்டில் அரைத்த தேங்காய், ஏலக்காய் தூள் மற்றும் அரிசி தூளை சேர்த்து லட்டுவாக பிடித்தால் சுவையான அரிசி லட்டு தயார்.

